Search
Wednesday 17 October 2018
  • :
  • :

‘புலி’ படத்துக்கு உலை வைத்த உள்குத்து வசனம்…!

‘புலி’ படத்துக்கு உலை வைத்த உள்குத்து வசனம்…!

‘புலி’ வருது… ‘புலி’ வருது… என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு வழியாக ‘புலி’ வந்து விட்டது.

இந்த வருடத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படமாக இருந்த ‘புலி’ படம், பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வெற்றிகரமாக வெள்ளித்திரைக்கு வந்துவிட்டது.

‘டபுள் யு’ சர்ட்டிஃபிகேட் கொடுக்குமளவுக்கு முழுக்க முழுக்க குழந்தைகளுக்கு பிடித்தமான திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார் சிம்புதேவன்.

ஸ்ருதிஹாசன் என்ற நடமாடும் ஆபாசம் தவிர ‘புலி’ படத்தில் வேறு ஆபாசமான அம்சங்கள் இல்லை, வன்முறைக்காட்சிகளும் இல்லை.

எனவேதான் தணிக்கைக்குழு ‘புலி’ படத்துக்கு ‘யு’ சான்றிதழை வழங்கியது.

‘யு’ சான்றிதழ் கிடைத்துவிட்டதால் ‘புலி’ படத்துக்கு தமிழக அரசின் வரிவிலக்கு நிச்சயம் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ‘புலி’ படத்துக்கு வரிவிலக்கு வழங்கப்படவில்லை.

அதன் காரணமாகவே ‘புலி’ படம் ரிலீஸ் ஆக முடியாத அளவுக்கு கடைசி நேரத்தில் பிரச்சனை ஏற்பட்டது.

வரிவிலக்கு இல்லை என்றால் வசூலில் 30 சதவிகிதம் வரியாக செலுத்த வேண்டும்.

எனவே ‘புலி’ படத்தை வாங்கிய அத்தனை விநியோகஸ்தர்களும் பேசிய தொகையில் 10 சதவிகித பணத்தைக் குறைத்துக் கொண்டு பாக்கியைத்தான் தருவோம் என்று சொல்லிவிட்டனர்.

அதனால் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு ‘புலி’ படம் வெளியாகுமா என்ற இக்கட்டான நிலைக்குத்தள்ளப்பட்டது.

‘புலி’ படத்துக்கு வரிவிலக்கு மறுக்கப்பட்டதற்கு என்ன காரணம்?

கருச்சிறுத்தையை கல்லால் அடிகிறார் விஜய். வாயில்லா ஜீவனை விஜய் தாக்கியதால்தான் வரிவிலக்கு தரவில்லை என்று அரசாங்கம் சொல்லக்கூடும்.

உண்மையான காரணம்.. ‘புலி’ படத்தின் கதையும், அதில் இடம்பெறும் வசனமும்தான்.

நாட்டை ஆள்கிற ராணி நல்லவர், அவர் பக்கத்தில் உள்ள தளபதிதான் கெட்டவர் என்கிற ரீதியில் இடம்பெற்றுள்ள காட்சிகளை ஜெயலலிதா, சசிகலா என்று பொருத்திப்பார்த்தால் ‘புலி’ படம் சொல்லும் கதை புரியும்.

‘புலி’ படத்தின் இறுதியில் மன்னராக முடிசூட்டப்பட்ட பிறகு விஜய் சொல்கிறார்…

“அரசப்பதவி என்னை தேடி வந்தாலும்… மக்களுக்காக கொடுக்கும் முதல் குரல் என்னுடைய குரலாகத்தான் இருக்கும்.”

இத்தனை உள்குத்துக்களை உள்ளடக்கியதாக ‘புலி’ படம் இருந்ததினால்தான் வரிவிலக்கு கொடுக்கவில்லையோ?




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better