Search
Thursday 21 June 2018
  • :
  • :

‘புலி’ படத்தின் உண்மையான பட்ஜெட்…?

‘புலி’ படத்தின் உண்மையான பட்ஜெட்…?


சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி ஆகியோர் நடித்த ‘புலி’ படம் தொடங்கப்பட்டபோது அதை மற்றுமொரு விஜய் படம் என்றே பலரும் நினைத்தனர்.

‘புலி’ படம் வெளியாகிவிட்ட தற்போதைய நிலையில்தான் அப்படம் குறித்த ஆச்சர்யமான பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

‘புலி’ படத்தின் பட்ஜெட் சுமார் 60 கோடி என்று சொல்லப்பட்டு வந்தது.

உண்மையில் ‘புலி’ படத்தின் பட்ஜெட் 130 கோடி என்ற தகவலை அப்படத்தின் தயாரிப்பாளரே வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

அதாவது ‘புலி’ படத்தை 117 கோடிக்கு பிசினஸ் செய்துள்ளனர்.

அப்படியும் 10 கோடி ரூபாய் டெபிஸீட்டாகி, நேற்று படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டது.

ஆக.. 117 கோடிக்கு படம் பிசினஸ் செய்யப்பட்டபோதும் 10 கோடி டெபிஸீட் ஏற்பட்டிருக்கிறது என்றால் படத்தின் பட்ஜெட் 127 கோடி என்ற அர்த்தம்.

இது தவிர நடிகை ஸ்ரீதேவி உட்பட ‘புலி’ படத்தில் நடித்த சிலருக்கு சம்பள பாக்கியும் உள்ளதாம்.

இப்படியான தகவல்களை வைத்துப்பார்த்தால் ‘புலி’ படத்தின் பட்ஜெட் 130 கோடியை தாண்டும் போலருக்கே…




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better