Search
Saturday 25 November 2017
  • :
  • :

கிருஷ்ணா நடிக்கும் படத்தில் தொடரும் சிக்கல்…

கிருஷ்ணா நடிக்கும் படத்தில் தொடரும் சிக்கல்…

பண்டிகை உட்பட கிருஷ்ணா நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்ததால் அவர் நடித்து வரும் படங்கள் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

அவர் நடித்த படங்களை வாங்கி நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்களின் கதியைப் பார்த்ததும் மற்ற விநியோகஸ்தர்கள் கிருஷ்ணா நடித்த படங்களை வாங்க தயங்குகின்றனர்.

தியேட்டர் அதிபர்கள் மத்தியிலும் கிருஷ்ணா நடித்த படங்களுக்கு ஆதரவில்லை.

இந்நிலையில், ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ராஜாராமன் இயக்கியுள்ள ‘வீரா’ படம் இம்மாதம் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் ஏராளமான படங்கள் ரிலீசாகவிருக்கிற நிலையில் வீரா படம் வெளியாக வாய்ப்பே இல்லை என்று மீடியேட்டர்கள் உறுதியாகச் சொல்கின்றனர்.

ஆனால் வீரா படத்தின் தயாரிப்பாளரோ செப்டம்பர் ரிலீஸ் என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.

கிருஷ்ணா, ஐஸ்வர்யா மேனன், கருணாகரன் முதலானோர் நடித்திருக்கும் இந்த படத்தை ஆக்‌ஷன் கலந்த காமெடி படமாக உருவாகியுள்ளார்கள்.

‘வீரா’ படத்தை தயாரித்துள்ள எல்ரெட் குமார் தற்போது பெரும் நஷ்டத்தில் இருப்பதால், ‘ஆரஞ்சு கிரியேஷன்ஸ்’ மற்றும் ‘வன்சன் மூவீஸ்’ ஆகிய இரண்டு நிறுவனங்களும் அவருக்கு கை கொடுத்து அவருடன் இணைந்து ‘வீரா’வை வெளியிட முன் வந்துள்ளன.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better