Search
Monday 17 December 2018
  • :
  • :

லட்சுமியை பாதித்த நான்கு தோல்விகள்

லட்சுமியை பாதித்த நான்கு தோல்விகள்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம் ‘லட்சுமி’.

ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகி என்று சொல்லப்பட்டாலும், லட்சுமி என்ற டைட்டில் ரோலில் வட இந்தியாவை சேர்ந்த ஒரு சிறுமி நடிக்கிறார். வட இந்திய சேனலில் நடைபெற்ற நடனத்துக்கான ரியாலிட்டி ஷோவில் முதல்பரிசு பெற்ற சிறுமி.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபுதேவா நடிப்பில் நடனத்தை மையமாக வைத்து இந்தப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

சாம்.சி.எஸ். இசை அமைத்துள்ள இந்த படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

லட்சுமி படம் தயாராகி பல மாதங்களாகிவிட்டநிலையில் பிசினஸ் ஆகாததினால் முடங்கிக்கிடந்தது.

இந்நிலையில் இம்மாதம் 24-ஆம் தேதி வெளியாகும் என்ற அதிகாரபூர்வ அறிவித்துள்ளனர்.

‘தேவி’ வெற்றிப்படத்தை தொடர்ந்து ஏ.எல்.விஜயும், பிரபுதேவாவும் இணைந்துள்ள படம் ‘லட்சுமி’.

என்றாலும் லட்சுமி படம் பிசனஸ் ஆகவில்லை. காரணம், விஜய் இயக்கிய வனமகன், தியா (கரு) படங்கள் படு தோல்வியடைந்தன. அதேபோல் பிரபுதேவா நடித்த குலேபகாவலி, மெர்குரி படங்களும் தோல்வியடைந்தன.

எனவே லட்சுமி படத்துக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுவிட்டது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better