Search
Sunday 19 August 2018
  • :
  • :

பார்த்திபன் இயக்கத்தில் பிரபுதேவா

பார்த்திபன் இயக்கத்தில் பிரபுதேவா

மெர்குரி படத்தை அடுத்து தற்போது யங் சங் மங் ‘சார்லி சாப்ளின் 2’ ஆகிய படங்களில் நடித்துவரும் பிரபுதேவா, அடுத்து சல்மான் கான், சோனாக்‌ஷி சின்ஹாவை வைத்து ‘தபாங்’ படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்க இருந்தார்.

மானை வேட்டையாடிய வழக்கில் சல்மான்கான் சமீபத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இந்தப் பிரச்சனை காரணமாக உடனடியாகப் தபாங் 3 படம் தொடங்கப்பட வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது.

எனவே நடிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார் பிரபுதேவா.

பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடித்த ‘உள்ளே வெளியே’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் வேலைகளில் தற்போது ஈடுபட்டுள்ளார் பார்த்திபன்.

இந்தப் படத்தில் சமுத்திரக்கனி ஹீரோவாக நடிக்கிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் பார்த்திபன்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better