Search
Saturday 18 August 2018
  • :
  • :

மீண்டும் சல்மான்கானை இயக்கும் பிரபு தேவா

மீண்டும் சல்மான்கானை இயக்கும் பிரபு தேவா

‘போக்கிரி’ படத்தின் ரீ-மேக்கான வான்டட் (‘WANTED’) படத்தை பாலிவுட்டில் இயக்கினார் பிரபுதேவா.

சல்மான்கான் கதாநாயகனாக நடிக்க பிரபு தேவா ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமான இந்த படம் கமர்ஷியலாக வெற்றியடைந்தது.

வான்டட் படத்தை தொடர்ந்து ‘ரௌடி ரத்தோர்’ படத்தையும் இயக்கினார். இது ‘சிறுத்தை’ படத்தின் ரீ-மேக்.

அதன் பிறகு இப்போது தமிழ் சினிமாவில் நடிகராக படு பிசியாக இயங்கி வருகிறார் பிரபு தேவா.

இதற்கிடையில் அஜித்துக்கு ஒரு கதை சொன்னார்.

சிவா, வினோத் படங்களுக்குப் பிறகு உங்கள் கதையில் நடிக்கிறேன் என்று அஜித் உறுதியளித்துள்ளாராம்.

எனவே ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பாலிவுட்டுக்கு சென்று ஹிந்தி படம் ஒன்றை இயக்க உள்ளார்.

சல்மான்கான் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘தபாங்’ படத்தின் மூன்றாம் பாகத்தையே பிரபு தேவா இயக்குகிறார்.

சல்மான்கான் ஹீரோவாக நடிக்க இருக்கும் இந்த படத்தில் சோனாக்‌ஷி சின்ஹா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better