Search
Sunday 23 September 2018
  • :
  • :

பிரபுசாலமனும்… யானையும்…

பிரபுசாலமனும்… யானையும்…

எம்.ஜி.ஆர். நடித்த நல்ல நேரம் படம் ஹிந்தியில் ‘ஹாத்தி மேரா சாத்தி’ என்ற பெயரில் எடுக்கப்பட்டது. 1971ல் வெளியான இந்தப்படத்தின் பெயரில் தற்போது ஏறக்குறைய 47 வருடங்களுக்குப் பிறகு ஒரு படம் உருவாகிறது.

இந்தப் படத்தை பிரபு சாலமன் இயக்குகிறார்.

‘ஹாத்தி மேரா சாத்தி’ என்ற பெயரில் ஹிந்தியில் உருவாகி வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகவிருக்கிறது. தெலுங்கு நடிகரான ராணா, விஷ்ணு விஷால் நடிக்க, கதாநாயகியாக கல்கி கண்மணி நடிக்கிறார்.

‘ஹாத்தி மேரா சாத்தி’ என்ற பெயரில் ஹிந்தியில் உருவாகும் இந்த படத்தின் தமிழ்ப்பதிப்புக்கு ‘காடன்’ என்று பெயர் வைத்துள்ளனர்.

தெலுங்கு டப்பிங்குக்கு ‘ஆரண்யா’ என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

யானையை மையமாக வைத்து மூன்று மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் யானையை வைத்து ‘கும்கி-2’ படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார் பிரபு சாலமன்.

கும்கி சென்ட்டிமெண்ட் காரணமாக யானையை நம்ப ஆரம்பித்துவிட்டார் போலிருக்கிறது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better