Search
Monday 23 April 2018
  • :
  • :

ஆர்.பி.சௌத்ரி வாங்கிக் கொடுத்த ‘போக்கிரி ராஜா’ தலைப்பு…!

ஆர்.பி.சௌத்ரி வாங்கிக் கொடுத்த ‘போக்கிரி ராஜா’ தலைப்பு…!

எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் தலைப்புகள் கூட இந்தளவுக்கு மறுபடியும் பயன்படுத்தப்பட்டதில்லை.

‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘நாடோடி மன்னன்’ போன்ற வெகு சில படங்களே மீண்டும் வைக்கப்பட்டுள்ளன.

ரஜினி நடித்த படங்களின் பெயர்கள்தான் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

‘குரு சிஷ்யன்’, ‘முரட்டுக்காளை’, ‘மாப்பிள்ளை’, ‘கழுகு’, ‘படிக்காதவன்’, ‘நான் சிகப்பு மனிதன்’ என ஏற்கெனவே ரஜினியின் பிரபல படத்தலைப்புகள் தமிழ் சினிமாவில் இரண்டாவது முறையாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

லேட்டஸ்ட்டாக… ‘பாயும் புலி’ படத்தின் பெயரையும் வைத்துவிட்டனர்.

இந்தவரிசையில் ரஜினி நடித்த ‘போக்கிரி ராஜா’ என்ற பெயரும் விரைவில் ஒரு படத்துக்கு சூட்டப்பட உள்ளது.

1982ஆம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளிவந்த சூப்பர்ஹிட் படம் இது.

‘திருநாள்’, ‘கவலை வேண்டாம்’ படங்களில் நடித்து வரும் ஜீவா அடுத்து ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’ இயக்குநர் ராம் பிரகாஷின் புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார்.

ரொமான்ஸ் காமெடி படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க இருக்கிறார்.

விரைவில் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் இப்படத்திற்கு, ரஜினியின் பிரபல டைட்டிலான ‘போக்கிரி ராஜா’வை தலைப்பாக வைக்க விரும்பி இருக்கிறார் இயக்குநர்.

இதற்கான ஏற்பாடுகளில் இறங்கிய ஜீவா ‘போக்கிரி ராஜா’வை தயாரித்த ஏவிஎம்மிடம் தன் அப்பா ஆர்.பி.சௌத்ரி மூலம் பேசி இருக்கிறார்.

‘போக்கிரி ராஜா’ தலைப்பைத் தர ஏவிஎம் சம்மதித்துவிட்டதாம்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better