Search
Saturday 15 December 2018
  • :
  • :

6 மணிக்கு பேட்ட ஃபர்ஸ்ட்லுக், 4.30க்கு 2.0 அறிவிப்பு

6 மணிக்கு பேட்ட ஃபர்ஸ்ட்லுக், 4.30க்கு 2.0 அறிவிப்பு

‘காலா’ படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார் ரஜினி.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் என மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டமே நடித்து வருகிறது.

மாலை 6 மணிக்கு இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய மோஷன் போஸ்டர் வெளியாக இருக்கிறது என்ற அறிவிப்பை நேற்று காலை வெளியிட்டிருந்தனர். இந்த தகவல் வெளியானதும் சமூகவலைத்தளங்கள் பரபரப்பானது. தலைவர்165 என்பது டிரெண்டானது.

அதன்படி மாலை 6 மணிக்கு வெளியான மோஷன் போஸ்டரில் படத்திற்கு ‘பேட்ட’ என்று வித்தியாசமான டைட்டில் அறிவிக்கப்பட்டது.

‘பேட்ட’ என்ற டைட்டிலும், அதன் மோஷன் போஸ்டரும், ரஜினி ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு, அவர்களுக்கு கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்தியது.

அது தொடர்ந்து நீடிக்க முடியாதபடி பேட்ட ஃபர்ஸ்ட்லுக் வெளியாவதற்கு சற்று முன் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘2.0’படத்தின் டீஸர் விநாயக சதுரித்தியன்று வெளியாக இருப்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இரண்டு அறிவிப்புகளும் வெவ்வேறு நாட்களில் வெளியாகி இருந்தால் ரஜினி ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்து இருப்பார்கள்.

ஒரே நாளில் வெளியானதால் எதை கொண்டாடுவது என்ற குழப்பத்தில் தள்ளப்பட்டுவிட்டனர்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better