Search
Friday 19 October 2018
  • :
  • :

மலையாளம் பேசும் ‘பேரன்பு’

மலையாளம் பேசும் ‘பேரன்பு’

தரமணி படத்தை அடுத்து ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பேரன்பு’. மம்மூட்டி ஹீரோவாக நடிக்கும் இந்தப்படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடித்துள்ளார்.

தங்கமீன்கள் படத்தில் சாதனா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் அமீர், சமுத்திரக்கனி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பி.எல். தேனப்பன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கும், அவளுடைய அப்பாவுக்கும் இடையிலான விஷயங்கள்தான் இந்தப் படத்தின் கதை.

அண்மையில் தணிக்கைக்கு அனுப்பப்பட்ட இந்தப் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

மம்முட்டி ஹீரோவாக நடித்திருப்பதால் பேரன்பு படத்தை மலையாளத்தில் டப் பண்ணி நேரடி மலையாளப்படம்போல் வெளியிடுகின்றனர். பேரன்பு படத்தின் மலையாள உரிமையை மம்முட்டியே வாங்கியுள்ளார்.

மம்மூட்டி பிறந்த நாளான செப்டம்பர் 7-ஆம் தேதி பேரன்பு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better