Search
Friday 14 December 2018
  • :
  • :

உயிர் பெறுமா உடைந்த “பென்சில்”…?

உயிர் பெறுமா உடைந்த “பென்சில்”…?

இசையமைப்பாளராக இருந்த ஜி.வி.பிரகாஷ்குமார் நடிகராக அறிமுகமான படம் ‘பென்சில்’.

மணிநாகராஜ் என்ற புதுமுக இயக்குநர் இயக்கிய ‘பென்சில்’ படத்தில் ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடித்தார்.

சில வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட ‘பென்சில்’ படம் ஃபர்ஸ்ட்காப்பி தயாராகிவிட்ட நிலையில் கிடப்பில் போடப்பட்டது.

அதன் பிறகு ‘பென்சில்’ படத்தைத் தயாரித்தவர் ஒரு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டதால் ‘பென்சில்’ படம் இனி வெளிவர வாய்ப்பே இல்லை என்று சொல்லப்பட்டது.

‘பென்சில்’ படத்தை எதிர்பார்த்து வெறுத்துப்போன ஜி.வி.பிரகாஷ்குமார் ஒருகட்டத்தில் மனதை தேற்றிக்கொண்டு மற்ற படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

அதன்படி அவர் நடித்த அடுத்தப் படம் ‘டார்லிங்’.

அந்தப் படம் வெற்றியடைந்ததை அடுத்து ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் நடித்தார்.

இந்தப் படம் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வசூலை அள்ளிக் கொண்டிருக்கிறது.

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் இதுவரை 15 கோடி வரை வசூல் செய்துள்ளது.

‘ஏ’ சான்றிதழ் பெற்ற படம் என்பதால் 30 சதவிகித வரிகள் போக விநியோகஸ்தர்களுக்கு 6 கோடி ஷேர் கிடைத்துள்ளது.

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் வெற்றிபெற்றதை பயன்படுத்தி பரணில் போடப்பட்ட ‘பென்சில்’ படத்தை வெளியிட ஏற்பாடு செய்து வருகின்றனர்.

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் 15 கோடி வசூலித்திருப்பதால் ‘பென்சில்’ படத்தை 10 கோடி விலை சொல்கிறார்களாம்.

ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த படம் என்பதற்காக 10 கோடி விலை சொல்வது அதிகம் என்று அதை வாங்க தயக்கம் காட்டுகின்றனர் விநியோகஸ்தர்கள்.

ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜாவிடம் படத்தை பிசினஸ் செய்ய முயற்சி செய்து வருகின்றனர்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better