Search
Monday 22 October 2018
  • :
  • :

பார்ட்டியை வாங்கிய சன் டிவி

பார்ட்டியை வாங்கிய சன் டிவி

டி.சிவாவின் ‘அம்மா கிரியேஷன்ஸ்’ தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், ‘கயல்’ சந்திரன், மிர்ச்சி சிவா, ரம்யா கிருஷ்ணன், ரெஜினா கெசன்ட்ரா, வரலட்சுமி சரத்குமார், சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் பார்ட்டி.

‘இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் இப்படத்தின் வியாபாரமும் சூடு பிடித்துள்ளது.

‘பார்ட்டி’ படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் வாங்கியுள்ளது. இந்தத் தகவலை படக்குழுவினரே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதற்குமுன் வெங்கட் பிரபு இயக்த்தில், சூர்யா நடித்த ‘மாசு’ என்கிற மாசிலாமணி படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம்தான் வாங்கியது.

இப்போது ‘பார்ட்டி’ படத்தின் உரிமையையும் வாங்கியுள்ளது சன் டிவி.

‘பார்ட்டி’ படத்துக்கு பிரேம்ஜி அமரன் இசை அமைத்துள்ளார்.

வாரா வாரம் ஏகப்பட்ட படங்கள் வெளியாகிவருவதால் சரியாக தேதி இல்லாமல் பார்ட்டி படம் காத்திருக்கிறது.

‘பார்ட்டி’ படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிக்க உள்ளார் தயாரிப்பாளர் டி.சிவா!




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better