Search
Tuesday 17 July 2018
  • :
  • :

“பாயும் புலி” நாளை ரிலீஸ்…!

“பாயும் புலி” நாளை ரிலீஸ்…!

‘லிங்கா’ விவகாரத்தில் உரிய இழப்பீடு கிடைக்கவில்லை என்ற கோபத்தில் வேந்தர் மூவீஸ் தயாரிப்பில் விஷால் நடித்த ‘பாயும்புலி’ படத்துக்கு ரெட் போட்டது ரோகிணி பன்னீர் செல்வம் தலைமையிலான திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்.

ரோகிணி பன்னீர் செல்வத்தின் அராஜகப் போக்கை கண்டித்தும், அவர் பணம் கேட்டு மிரட்டுகிறார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலும் நாளை முதல் அதாவது செப்டம்பர் 4 ஆம் தேதி புதிய திரைப்படங்களை வெளியிட மாட்டோம் என தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது.

அதைத் தொடர்ந்து நாளை வெளிவருவதாக சொல்லப்பட்ட ‘பாயும் புலி’ திரைப்படம் வெளிவருமா வராதா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

‘பாயும் புலி’ படத்துக்கு பன்னீர் செல்வத்தினால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே இந்த முடிவை தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ளது.

இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறிவிப்பை ‘பாயும் புலி’ படத்தின் ஹீரோவான விஷாலே ஏற்கவில்லை என்பதுதான் வியப்பான விஷயம்.

கடைசி நேரத்தில் படத்தை வெளியிடாமல் முடக்குவது முறையற்றது என்று கருத்துத் தெரிவித்துள்ள விஷால்,

“ஒரு மாத காலமாக இந்தப் பிரச்சனை குறித்து எந்த முடிவையும் எடுக்காமல், கடைசி நாளில் இப்படி பிரச்சனையை உருவாக்குவது சரியல்ல. ஒரு வினியோகஸ்தருக்காகவும், சில திரையரங்குகளுக்காகவும் படத்தின் வெளியீட்டை ஏன் நிறுத்த வேண்டும்?” என்றும் கேள்வி எழுப்பி நேற்று இரவு ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

அதன் பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து மற்றொரு கருத்தையும் வெளியிட்டிருக்கிறார் விஷால்.

“ ‘பாயும் புலி’ படம் திட்டமிட்டபடி இரு மொழிகளிலும் செப்டம்பர் 4ம் தேதி வெளிவரும். கடின உழைப்பு என்றுமே வீண் போகாது.”

என்று விஷால் சொன்ன கருத்தைத் தொடர்ந்து நாளை வெளிவருவதாக இருந்த ‘போக்கிரி மன்னன்’ படமும் திட்டமிட்டபடி நாளை வெளிவரும் என அப்படத்தை வெளியிடும் தணிகை வேல் கூறியிருக்கிறார்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better