Search
Tuesday 16 October 2018
  • :
  • :

பாலிவுட்டுக்குப் போன பா.ரஞ்சித்… பின்னணி என்ன?

பாலிவுட்டுக்குப் போன பா.ரஞ்சித்… பின்னணி என்ன?

காலா படத்தை அடுத்து அமீர்கான் நடிக்கும் ஹிந்திப்படத்தை பா.ரஞ்சித் இயக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியானது.

இந்த தகவலை பா.ரஞ்சித்துக்கு நெருக்கமான சிலரே மீடியாக்கள் சம்மந்தப்பட்ட வாட்ஸ்அப் குரூப்புகளில் பரப்பி வந்தனர்.

அதன் பிறகு என்ன நடந்ததோ… பா.ரஞ்சித் படத்தில் அமீர்கான் நடிக்கவில்லை என்ற தகவல் வெளியானது.

இந்நிலையில், பிரபல ஈரானிய இயக்குனர் மஜித் மஜ்தி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பியான்ட் த க்ளவுட்ஸ் (‘Beyond The Clouds’) என்ற ஹிந்தி படத்தை தயாரித்த நிறுவனங்களில் ஒன்றான நம பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் ஹிந்திப்படத்தை பா.ரஞ்சித் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படம் வரலாற்று பின்னணியில் உருவாக இருக்கிறது.

பா.ரஞ்சித் திடீரென பாலிவுட்டுக்குப் போனது ஏன்?

அண்மையில் பா.ரஞ்சித்துடன் நட்பான குஜராத் எம்.எல்.ஏவான ஜிக்னேஷ் மேவானியின் முயற்சியிலேயே அவருக்கு ஹிந்திப்பட வாய்ப்பு கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better