Search
Sunday 21 October 2018
  • :
  • :

பா.இரஞ்சித்துக்கு பெரிவிலையை கொடுத்த ‘பரியேறும் பெருமாள்’

பா.இரஞ்சித்துக்கு பெரிவிலையை கொடுத்த ‘பரியேறும் பெருமாள்’

‘கபாலி’ படத்தை தொடர்ந்து ‘காலா’ படத்தை இயக்கிவரும் பா.ரஞ்சித் இன்னொரு பக்கம் ‘நீலம் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற பட நிறுவனத்தை தொடங்கி தயாராப்பாளராகியும் விட்டார்.

இந்த நிறுவனம் சார்பில் ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்தை தயாரித்துள்ளார்.

பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த மாரி செல்வராஜ் என்பவர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் கதிர் கதாநாயகனாக நடித்துள்ளார்.

கதாநயகியாக ஆனந்தி நடிக்கிறார்.

இவர்களுடன் ‘யோகி’ பாபு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவிருக்கிறது.

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தயாரிப்பாளரான வினோத் இப்படத்தின் தயாரிப்பில் இணைந்துள்ளார்.

அவரது முயற்சியில் ‘பரியேறும் பெருமாள்’ படத்தை பெரிவிலை கொடுத்து வாங்கியுள்ளது லைகா புரொடக்‌ஷன்ஸ்.

‘பரியேறும் பெருமாள்’ படத்தை அடுத்த மாதம் (மார்ச்) வெளியிட பா.ரஞ்சித் முடிவு செய்துள்ளார்.

படம் வெளியாவதற்கு முன்னரே பா.இரஞ்சித்துக்கு பல கோடி லாபத்தைக் கொடுத்துவிட்டது ‘பரியேறும் பெருமாள்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better