Search
Thursday 15 November 2018
  • :
  • :

குழப்பத்தில் நவம்பர் 16-ஆம் தேதி

குழப்பத்தில் நவம்பர் 16-ஆம் தேதி

நடிகர் உதயா தனது ‘ஜேஷன் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் தயாரித்து கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘உத்தரவு மகாராஜா’.

அறிமுக இயக்குனர் ஆசிஃப் குரைஷி இயக்கியுள்ள இந்த படம் நவம்பர் 16-ஆம் தேதி வெளியாகிறது.

ஏற்கெனவே இப்படத்திற்கு பல ரிலீஸ் தேதிகள் பரிசீலனை செய்யப்பட்டு, அப்போதெல்லாம் வேறு பெரிய படங்கள் வெளியானதால் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை.

உத்தரவு மகாராஜா படத்தை நவம்பர் 16-ஆம் தேதி ரிலீஸ் செய்ய இப்போது தயாரிப்பாளர் சங்கத்தில் அனுமதி கிடைத்திருக்கிறது.

அதே தேதியில் ‘காற்றின் மொழி’, ‘செய்’ ஆகிய படங்களும் ரிலீசாகவிருக்கின்றன.

நவம்பர் 16-ஆம் தேதி இந்த மூன்று படங்களின் ரிலீசுக்கு அனுமதி கொடுத்துள்ள நிலையில் அதே நாளில் விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’, ‘ஜெயம்’ ரவியின் ‘அடங்க மறு’ ஆகிய படங்களை ரிலீஸ் செய்யவும் முயற்சி நடந்து வருகிறது!

அதோடு தீபாவளிக்கு வெளிவருவதாக இருந்த விஜய் ஆண்டனியின் திமிரு பிடிச்சவன் படமும் நவம்பர் 16-ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் அடிபடுகிறது.

ஏற்கெனவெ ரிலீஸ் தேதி குறிக்கப்பட்ட மூன்று படங்களுடன் ‘சீதக்காதி’, ‘அடங்க மறு’ ‘திமிரு பிடிச்சவன்’ ஆகிய மூன்று படங்களும் ரிலீசானால் எந்த படத்துக்குத்தான் தியேட்டர்கள் கிடைக்கும்? நிச்சயமாக செய், உத்தரவு மகாராஜா படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்பே இல்லை.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better