Search
Monday 16 July 2018
  • :
  • :

டார்லிங் நடிகைக்கு குவியும் பட வாய்ப்புகள்…!

டார்லிங் நடிகைக்கு குவியும் பட வாய்ப்புகள்…!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடித்த ‘டார்லிங்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நிக்கி கல்ராணி.

‘டார்லிங்’ படத்தின் வெற்றி காரணமாக நிக்கிக்கு தற்போது அடுத்தடுத்து புதுப்பட வாய்ப்புகள் தேடிவரத் தொடங்கியுள்ளன.

ஆதி ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளியான ‘யாகாவராயினும் நா காக்க’ படத்தில் கதாநாயகியாக நடித்த நிக்கி, அப்படத்தைத் தொடர்ந்து தற்போது பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ‘கோ 2’, ஜீவாவுடன் ‘கவலை வேண்டாம்’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படங்களைத் தொடர்ந்து விஷ்ணு விஷாலுடன் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

‘சகுனி’ படத்தை இயக்கிய சங்கர் தயாள் இயக்கத்தில் ‘வீர தீர சூரன்’, ‘சேட்டை’ பட இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் ‘போடா ஆண்டவனே என் பக்கம்’ ஆகிய படங்களில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார் விஷ்ணு.

இதனைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் புதிய படமொன்றிலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் விஷ்ணு.

இந்தப்படத்தில்தான் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிக்கிறார் நிக்கி.

இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் டாப்ஸியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

அவர் பெரிய சம்பளம் கேட்டதால் டாப்ஸி வேண்டாம் என முடிவு செய்து நிக்கியை புக் பண்ணிவிட்டனர்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better