Search
Thursday 16 August 2018
  • :
  • :

மார்க்கெட் போனதால் ஹன்சிகா எடுத்த அதிரடி முடிவு…

மார்க்கெட் போனதால் ஹன்சிகா எடுத்த அதிரடி முடிவு…

தனுஷ் நடித்த மாப்பிள்ளை படம் தொடங்கி மனிதன் படம்வரை தமிழில் 20 படங்களில் கதாநாயகியாக நடித்துவிட்டார் ஹன்சிகா.

இதுவரை அவரது வண்டி பிரேக்டவுன் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தது.

காரணம்… பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை என்பதுபோல், பட வாய்ப்புகள் ஹன்சிகாவைத் தேடி வந்தன.

அவர் கேட்ட சம்பளத்தை நயாபைசா குறைக்காமல் கொடுத்தது மட்டுமல்ல, அவர் போட்ட கண்டிஷன்களுக்கு எல்லாம் பூம்பூம்மாடுபோல் தலையாட்டினார்கள் தயாரிப்பாளர்கள்.

“சம்பளத்தில் 10 சதவிகிதம் மட்டுமே கணக்கில் காட்டுவோம். 90 சதவிகித சம்பளத்தை  கணக்கில் வராத கருப்புப்பணமாக தர வேண்டும். அதுவும் சென்னையில் அல்ல, மும்பையில் என்னுடைய வீட்டில் டோர் டெலிவரி செய்ய வேண்டும்.” என்பதும் ஹன்சிகா போட்ட கண்டிஷன்களில் ஒன்று.

அதற்கும் ஒப்புக்கொண்டு ஹன்சிகா கையைக்காட்டும் ஹவாலா ஏஜெண்ட் மூலம் மும்பைக்கு பணத்தை அனுப்பி வைத்தனர் தயாரிப்பாளர்கள்.

தன் மகளுக்கு மார்க்கெட் இருப்பதால்  நாம் வைத்ததுதான் சட்டம் என்று தயாரிப்பாளர்களை ஆட்டி வைத்தார் ஹன்சிகாவின் அம்மா.

அதுமட்டுமல்ல, ஹன்சிகாவுக்கு என்று மானேஜர் கூட வைத்துக் கொள்ளாமல் ஹன்சிகாவின் அம்மாவே நேரடியாக கால்ஷீட் விவகாரங்களை கவனித்து வந்தார்.

மானேஜர் வைத்தால் சம்பளத்தில் குறைந்தது 5 சதவிகிதம் கொடுக்க வேண்டும்.

ஹன்சிகா வாங்கிய ஒன்றரை கோடி சம்பளத்தில் 5 சதவிகிதம் என்றால் சுமார் ஏழரை லட்சம்.

அதனாலேயே மானேஜர் வேண்டாம் என்பதில் பிடிவாதமாக இருந்தார் ஹன்சிகாவின் அம்மா.

கட்…

இதெல்லாம் சில மாதங்களுக்கு முந்தைய நிலவரம்.

அப்படீன்னா இப்போது என்ன நிலவரம்?

ஜெயம் ரவி உடன் நடித்து வரும் போகன் என்ற படம் மட்டுமே ஹன்சிகாவின் கைவசம் உள்ள ஒரே படம்.

விஜய், தனுஷ், ஆர்யா, ஜெயம் ரவி தொடங்கி உதயநிதி, ஜீவா வரை ஏறக்குறைய எல்லா ஹீரோக்களுடனும் ஒரு ‘ரவுண்ட்’ வந்துவிட்டார் ஹன்சிகா.

ரசிகர்களுக்கு மட்டுமல்ல அவருடன் இணைந்த ஹீரோக்களுக்கும் இப்போது ஹன்சிகா திகட்டிப்போய்விட்டார்.

அதனால் ஹீரோக்களின் சிபாரிசு விரல்கள் இப்போதெல்லாம் ஹன்சிகாவின் பக்கம் நீள்வதே இல்லை.

எனவே இனிமேல் ஹீரோக்களின் தயவில் தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்காது என்பதை தெளிவாக புரிந்து கொண்டுவிட்டார்கள் ஹன்சிகாவும் அவருடைய மம்மியும்.

அதைத்தொடர்ந்து அவர்கள் எடுத்த அதிரடி முடிவுதான் ஹன்சிகாவுக்கு மானேஜர் என்று ஒருவரை நியமித்தது.

ஒவ்வொரு ஹீரோவையும் அணுகி, ஹன்சிகாவின் அருமை பெருமையை எடுத்துச் சொல்லி அவருக்கு பட வாய்ப்பு பிடிக்க வேண்டியதுதான் அவருக்கு இடப்பட்டுள்ள பணி.

ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு ஆல் இன் ஆலாக இருக்கும் அந்த நபர் முதல் முயற்சியாக ஜி.வி. பிரகாஷ்குமாரிடம் ஹன்சிகாவின் பெருமைகளை சொல்ல ஆரம்பித்திருக்கிறாராம்.

நடிகைங்க எவ்வளவு உஷார் பாருங்க…




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better