Search
Thursday 18 October 2018
  • :
  • :

விஜய்சேதுபதியை சம்மதிக்க வைத்த நயன்தாரா

விஜய்சேதுபதியை சம்மதிக்க வைத்த நயன்தாரா

‘டிமாண்டி காலனி’ படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படம் தொடங்கி இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டநிலையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் இன்று வெளியானது!

சிபிஐ அதிகாரியாக இந்த படத்தில் நயன்தாரா நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் விஜய்சேதுபதியும், நயன்தாராவும் கணவன், மனைவியாக நடிக்கிறார்கள்.

திருமணத்திற்கு பிறகு நயன்தாரா கர்பிணியாக, அவரை அன்போடு, அரவணைத்து கவனிக்கும் நல்ல கணவராக விஜய்சேதுபதியின் கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் விஜய்சேதுபதி கௌரவ வேடத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டாலும் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் 15 நிமிடங்கள் இடம்பெறுகின்றன!

நயன்தாரா கெட்டுக்கொண்டதால் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் விஜய்சேதுபதி.

இமைக்கா நொடிகள் படத்தில் குரூரமாக தொடர் கொலைகளை செய்யும் ‘ருத்ரா’ என்ற சைக்கோ கில்லராக நடிக்கிறார் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யாப்.

மருத்துவ கல்லூரி மாணவராக அதர்வா நடிக்கிறார்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better