Search
Thursday 15 November 2018
  • :
  • :

நயன்தாரா படத்தை தள்ளி வைக்கச் சொன்ன கமல்

நயன்தாரா படத்தை தள்ளி வைக்கச் சொன்ன கமல்

‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்திருக்கும் படம் ‘கோலமாவு கோகிலா’.

நயன்தாராவுடன் யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த படத்துக்கு, அனிருத் இசை அமைத்திருக்கிறார்.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளநிலையில் இந்தப் படத்தை ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியிட முதலில் முடிவு செய்திருந்தனர்.

இப்போது ‘கோலமாவு கோகிலா’ படத்தின் ரிலீஸ் தேதியை ஒரு வாரம் தள்ளி வைத்திருக்கிறார்கள்.

ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படம் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வெளியாகிறது.

பட வெளியீடு தள்ளி வைக்கப்பட என்ன காரணம்?

ஆகஸ்ட் 10 அன்று கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ வெளியாகிறது. அதே தேதியில் கோலமாவு கோகிலா படம் வெளியானால் கமல் படத்துக்கு கிடைக்கவிருக்கும் தியேட்டர்களின் எண்ணிக்கை குறையும் நிலை உருவானது.

இதை தவிர்ப்பதற்காக கமலே லைகாவிடம் பேசி, கோலமாவு கோகிலா படத்தை ஆகஸ்ட் 17 ஆம் தேதி தள்ளிவைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

அதன் காரணமாகவே விஸ்வரூபம்- 2 படத்துடன் களமிறங்கவிருந்த ‘கோலமாவு கோகிலா’ படத்தை தள்ளி வைத்ததாக இப்போது தகவல் வெளியாகிறது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better