Search
Thursday 17 January 2019
  • :
  • :

நயன்தாராவுக்கும் விஜய்க்கும் என்ன பிரச்சனை…?

நயன்தாராவுக்கும் விஜய்க்கும் என்ன பிரச்சனை…?

‘புலி’ படத்தை அடுத்து தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய்.

கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப் படத்தை அடுத்து எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் விஜய்.

தற்போது அஜித்தை வைத்து ‘வேதாளம்’ படத்தைத் தயாரித்து வரும் ஏ.எம்.ரத்னம் அப்படத்தை அடுத்து விஜய் நடிக்கும் படத்தைத் தயாரிக்க உள்ளார்.

இந்தப் படத்துக்கு கதாநாயகி யார் என்று ஆலோசனை நடத்தியபோது தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னமும், இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவும் நயன்தாராவை கமிட் பண்ணலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

நயன்தாராவை கதாநாயகியாகப் போடலாம் என்ற தகவல் விஜய்யிடம் சொல்லப்பட்டபோது, ஒரு கணம் கூட யோசிக்காமல், நயன்தாரா வேண்டாம். வேற நடிகையைப் பாருங்க என்று சொல்லிவிட்டாராம்.

விஜய் எதற்காக நயன்தாராவை வேண்டாம் என்று சொல்கிறார் என்று புரியாமல் எஸ்.ஜே.சூர்யா குழம்பிப்போனாராம்.

ஏற்கனவே ‘வில்லு’ படத்தில் விஜய்யும் நயன்தாராவும் இணைந்து நடித்தனர்.

அந்தப் படத்தில் நடித்தபோதுதான் அப்படத்தின் இயக்குநரான பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்கும் காதல் ஏற்பட்டது.

காதல் வயப்பட்ட ஜோரில் தாய்லாந்துக்கு படப்பிடிப்புக்கு சென்றபோது இருவரும் நடந்து கொண்ட பழைய சம்பவங்களை விஜய்யின் ஆட்களிடம் கேட்டு தெரிந்து கொண்ட பிறகு நயன்தாரா பெயரையே எஸ்.ஜே.சூர்யா உச்சரிக்கவில்லையாம்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better