Search
Wednesday 12 December 2018
  • :
  • :

நஷ்டத்தை ஏற்படுத்திய நவாப்

நஷ்டத்தை ஏற்படுத்திய நவாப்

கடந்த வாரம் லைகா தயாரிப்பில் மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’ மற்றும் பா.ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய ‘பரியேறும் பெருமாள்’ ஆகிய 2 திரைப்படங்கள் வெளியாகின!

இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெருவாரியான வரவேற்பு கிடைத்தது. முக்கியமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்ததால் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. இரண்டும் வெற்றிப்படங்களாக அமைந்தன.

இவற்றில் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா இரப்பா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ள ‘செக்கச் சிவந்த வானம்’ படம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது.

அதேநேரம் நவாப் என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட்ட இந்தப்படத்துக்கு அங்கே எதிர்பார்த்த வரவேற்பும் வெற்றியும் கிடைக்கவில்லை.

இப்படத்தின் தெலுங்கு டப்பிங் ரைட்ஸை 5 கோடிக்கு வாங்கி சில கோடிகள் பிரிண்ட் அண்ட் பப்ளிசிட்டிக்கு செலவு படத்தை வெளியிட்டனர்.

ஆந்திர ரசிகர்கள் இப்படத்தை ரசிக்கவில்லை. எனவே நவாப் படத்தை வாங்கியவருக்கு 5 கோடிக்கு மேல் நஷ்டம் வரும் என்று சொல்லப்படுகிறது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better