Search
Wednesday 20 June 2018
  • :
  • :

நட்சத்திர கிரிக்கெட் புறக்கணிப்பு..! அஜித், விஜய் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

நட்சத்திர கிரிக்கெட் புறக்கணிப்பு..! அஜித், விஜய் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

அஜித் ரசிகர்கள் பரப்பிய நெகட்டிவ்வான பிரச்சாரத்தை முறியடித்து, நட்சத்திர கிரிக்கெட் போட்டியை வெற்றிகரமாக நடத்திக் காட்டிவிட்டனர் நடிகர் சங்க நிர்வாகிகள்.

முக்கியமாக விஷால், நாசர், கார்த்தி கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக ஓய்வே இல்லாமல் உழைத்தனர்.

அதற்கான பலனாக, நடிகர் சங்கம் கட்டுவதற்கான தொகையில் சுமார் 10 கோடியை வெற்றிகரமாக திரட்டிவிட்டன.

ஊர் கூடி தேர் இழுப்பதுபோல், ஒட்டுமொத்த திரைப்பட நட்சத்திரங்களும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் திரண்டனர்.

ஒரு பக்கம், கிரிக்கெட் விளையாட்டு நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நிகழ்ச்சிக்கு வருகை தந்த நட்சத்திரங்களை அருகிலிருந்து பார்வையாளர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக ஒரு காரில் நட்சத்திரங்களை மைதானத்தை சுற்றி வரச் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தினர்.

கமல், ரஜினி, சூர்யா, விக்ரம், விஷால், கார்த்தி, ஜெயம் ரவி, ஜீவா, ஆர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என முன்னணி நட்சத்திரங்கள் அனைவரையும் நேரில் பார்த்துவிட்ட பரவசத்தில் இருந்த ரசிகர்களுக்கு அஜித் வராததோ… விஜய் வராததோ ஏமாற்றம் அளிக்கவில்லை.

ரசிகர்களின் மனநிலை இப்படி இருக்க, திரைப்பட நட்சத்திரங்களின் மனநிலை வேறு மாதிரி இருந்தது.

சேப்பாக்கம் மைதானத்துக்கு வந்திருந்த நட்சத்திரங்களில் பலரும் ஒரே கருத்தை தங்களுக்குள் பரிமாறிக் கொண்டனர்.

அஜித்தாக இருந்தால் என்ன… விஜய்யாக இருந்தால் என்ன…. நம்மோடு ஒற்றுமையாக இல்லாத நடிகர்களை நாம் ஒதுக்கி வைக்க வேண்டும். அவர்கள் நடிக்கும் படங்களில் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் நடிக்க மாட்டோம் என்று அறிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வலியுறுத்தினர்.

இது சாத்தியமா?

சில வருடங்களுக்கு முன், மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ உடன் முரண்பட்டு மோதல்போக்கை கடைபிடித்து வந்தார் மூத்த நடிகரான திலகன்.

ஒட்டுமொத்த மலையாள நடிகர், நடிகைகளும் சேர்ந்து திலகனுக்கு தொழில் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்று முடிவு செய்து அவரை வீட்டில் உட்கார வைத்தனர்.

அதேபோல், நடிகர் சங்கத்துடன் ஒத்துழைக்காத விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கு நாம் ஒத்துழைப்பு கொடுக்கக் கூடாது. அவர்களுக்கு நடிகர் சங்கத்தின் சக்தியை புரிய வைக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துக் கொண்டனர்.

ஒருவேளை நடிகர், நடிகைகளுக்குள் இதே கருத்து ஒருமித்த குரலாக வெளிப்பட்டால், அஜித், விஜய் மீது இப்படியொரு நடவடிக்கையை எடுக்கும்நிலைக்கு நடிகர் சங்கம் தள்ளப்பட்டாலும் ஆச்சர்யமில்லை.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better