Search
Thursday 15 November 2018
  • :
  • :

நகுல் படத்துக்கு தியேட்டர் கிடைக்குமா?

நகுல் படத்துக்கு தியேட்டர் கிடைக்குமா?

நகுல் நடித்த படங்கள் கமர்ஷியலாக வெற்றியடையாததினால் அவரது படங்களை பிசினஸ் செய்வதில் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.

ராஜ்பாபு இயக்கத்தில் நகுல், ஆஞ்சல் முஞ்சால் இணைந்து நடித்திருக்கும் படம் ‘செய்’.

பிரகாஷ் ராஜ், நாசர் ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவை விஜய் உலகநாத் கவனித்துள்ளார்.

புதிய பட நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நிக்ஸ் லோபஸ் இசை அமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியானது. ஆனாலும் படத்தை யாரும் வாங்க முன்வரவில்லை.

இந்நிலையில் செய் படத்தை நவம்பர் 16-ஆம் தேதி சொந்தமாக ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

அதே தேதியில் காற்றின் மொழி, உத்தரவு மகாராஜா, உட்பட வேறு சில படங்களும் வெளியாகின்றன.

இதற்கிடையில் ஜெயம்ரவி நடித்துள்ள அடங்க மறு படம் கவுன்சிலின் உத்தரவை மீறி வெளியாகிறது.

இதனால் செய் படம் வெளியாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஆனாலும் எப்படியும் நவம்பர் 16 அன்று தங்கள் படத்தை வெளியிட்டே தீருவது என்ற எண்ணத்தில் வேலைகளை துவக்கியுள்ளனர்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better