Search
Tuesday 21 August 2018
  • :
  • :

சிவசக்தி நடிப்பில் Sci-fi த்ரில்லராக உருவாகவுள்ள ‘நகல்’

சிவசக்தி நடிப்பில் Sci-fi த்ரில்லராக உருவாகவுள்ள ‘நகல்’

எஸ்2எஸ் பிக்சர்ஸ் புரொடக்ஷன் தயாரிப்பில், ஏ.ஆர் கிருஷ்ணா மோகன் இயக்கத்தில், சிவசக்தி நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் ‘நகல்’.

‘நகல்’ திரைப்படம் மிகவும் விறுவிறுப்பான Sci-fi படமாக உருவாகவுள்ளது.

இப்படத்தில் சிவசக்தி கதாநாயகனாகவும் மும்பை மாடல் ரிஷ்மா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். கதாநாயகி பல குறும்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கதை மற்றும் திரைக்கதை சதுர்த்தி ஐயப்பன், எஃப்.எஸ்.பைசல் இசையில்,ஜோன்ஸ் ஆனந்தன் ஒளிப்பதிவில் உருவாகவுள்ள இப்படத்துக்கு ஸ்டன் சிவா ஸ்டன்ட், மணிவர்மா மற்றும் ஷரன் சந்தரம் ஆகியோர் கலையை கவனிக்கின்றனர்.

Sci-fi த்ரில்லராக உருவாகவுள்ள இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தமிழின் முன்னனி நடிகர்கள் பலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று காலை சென்னையில் பூஜையுடன் துவங்கியது.

ஜுலை 9ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி 40 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

படத்தின் 75% படப்பிடிப்பு சென்னையிலும், மீதம் உள்ள படப்பிடிப்பு வெளிநாடுகளிலும் உருவாகவுள்ளது.

மெடிக்கல் ரீதியான காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கவுள்ளனர் குழுவினர். பாடல்கள் ஊட்டியில் உருவாகவுள்ளது.

இயக்குனர் சுப்பிரமணிய சிவா, நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்டிநட்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better