Search
Sunday 20 January 2019
  • :
  • :

நாச்சியார் படத்துக்கு பிரச்சனை வருமா?

நாச்சியார் படத்துக்கு பிரச்சனை வருமா?

பாலா இயக்கும் படங்கள் எப்போது வெளியாகும் என்பது பாலாவுக்கே தெரியாது என்று படத்துறையில் சொல்வார்கள்.

காரணம்… எவ்வித திட்டமிடலும் இல்லாமல் தன்னுடைய மனம் போன போக்கில் படம் எடுப்பார்.

இந்த விமர்சனத்துக்கு மாறாக, ஜி.வி.பிரகாஷ் குமார், ஜோதிகா நடிக்கும் ‘நாச்சியார்’ படத்தை விரைவாக எடுத்து முடித்துள்ளார்.

தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இதனை தொடர்ந்து ‘நாச்சியார் படத்தை விரைவில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள்!

தற்போது கிடைத்த தகவலின்படி ‘நாச்சியார்’படத்தை பிப்ரவரி-9 ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

‘மகளிர் மட்டும்’ படத்தை தொடர்ந்து ஜோதிகா நடித்துள்ள படம் இது.

பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தை வாங்கி நஷ்டப்பட்டவர்கள் நஷ்டஈடு கேட்டு நாச்சியார் ரிலீஸ் நேரத்தில் பிரச்சனை செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் அடிபடுகிறது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better