Search
Tuesday 23 October 2018
  • :
  • :

பாலா உடனான பழைய பகையை மறக்காத மிஷ்கின்

பாலா உடனான பழைய பகையை மறக்காத மிஷ்கின்

‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை இயக்கி தயாரித்த மிஷ்கின் அடுத்து ‘சவரக்கத்தி’என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

மிஷ்கின், இயக்குர் ராம் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை ஜி.எஸ். சத்யா என்ற புதிய இயக்குநர் இயக்கியுள்ளார்.

கதாநாயகியாக பூர்ணா நடித்துள்ளார்.

மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு’ படத்திற்கு இசை அமைத்த அரோல் கரோலி சவரக்கத்தி படத்துக்கு இசை அமைத்திருக்கிறார்.

இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகின.

சவரக்கத்தி படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்தநிலையில் படத்தை பிப்ரவரி 9-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அதேநாளில், பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், ஜோதிகா நடித்துள்ள ‘நாச்சியார்’ படமும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சவரக்கத்தி படத்தை பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியிடாமல் தள்ளி வைக்கும்படி மிஷ்கினிடம் பாலா கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு பழைய பகையை மறக்காத மிஷ்கின் மறுத்துவிட்டதாகவும் தகவல்.

எனவே நாச்சியார், சவரக்கத்தி ஒரேநாளில் வெளியாக உள்ளது என்பதே இப்போதைய தகவல்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better