Search
Monday 16 July 2018
  • :
  • :

‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்துக்கு U/A சான்றிதழ்

‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்துக்கு U/A சான்றிதழ்

‘பாஃப்டா’ படநிறுவனம் சார்பில் ஜி. தனஞ்சயன் தயாரிக்க, திரு இயக்கத்தில் கார்த்திக், கௌதம் கார்த்திக், ரெஜினா கெசன்ட்ரா, வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’.

இப்படம் சமீபத்தில் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது.

படத்தை பார்த்த தணிக்கைக் குழு உறுப்பினர்கள் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்துக்கு U/A சான்றிதழ் வழங்கினார்கள்.

இந்த படத்தை ஜூன் மாதம் வெளியிடுவதற்கான வேலைகளில் இறங்கியது தயாரிப்பு தரப்பு.

காலா உட்பட ஜூன் மாதம் பல படங்கள் வெளிவர காத்திருப்பதால் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படத்தை ஜூலை மாதம் 6-ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இந்த தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்திற்கு சாம்.சி.எஸ். இசை அமைத்துள்ளார்.

ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better