Search
Sunday 17 February 2019
  • :
  • :

படை எடுத்து வரும் படங்கள்…

படை எடுத்து வரும் படங்கள்…

வாரம்வாரம் ஏகப்பட்ட படங்கள் வெளியாகிக் கொண்டிருப்பதால் தங்களின் படங்களை வெளியிட தேதி கிடைக்காமல் தவித்து வருகின்றனர் தயாரிப்பாளர்கள்.

முக்கியமாக சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள்.

நவம்பர் மாதம் மட்டும் சுமார் பத்து படங்கள் வெளியாக உள்ளன.

நவம்பர் 03ஆம் தேதியன்று, மீரா கதிரவன் இயக்கியுள்ள ‘விழித்திரு’ படமும் சித்தார்த் நடிக்கும் ‘அவள்’ படமும் வெளியாகின்றன.

அடுத்தடுத்த வாரங்களில் இப்படை வெல்லும், அறம், இந்திரஜித்,நெஞ்சில்துணிவிருந்தால், தீரன் அதிகாரம் ஒன்று, கொடிவீரன், சத்யா, செம ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.

டிசம்பர் மாதத்தில், திருட்டுபயலே- 2, அண்ணாதுரை, ஸ்கெட்ச், இமைக்காநொடிகள், வேலைக்காரன், குப்பத்துராஜா, ஒண்ணுபோதும் நின்னுபேசும் போன்ற படங்கள் தியேட்டருக்கு வரத் தயாராக உள்ளன.

பொங்கலுக்கு சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம், அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் ‘பார்ட்டி’. ஆர்.கே.சுரேஷின் ‘பில்லா பாண்டி’ பொங்கலுக்கு ரிலீஸாகவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தனை படங்களுக்கும் தியேட்டர் கிடைப்பது ஒரு பக்கம் இருக்கட்டும், இத்தனை படங்களையும் தியேட்டரில் பார்க்கும் பொதுஜனங்கள் நிலைமை என்னாகும்?




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better