Search
Tuesday 22 May 2018
  • :
  • :

மோகன்லாலும், சூர்யாவும் முதன் முறையாக இணையும் படம்…

மோகன்லாலும், சூர்யாவும் முதன் முறையாக இணையும் படம்…

செல்வராகவன் இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை படம் இன்னும் வெளிராமல் முடங்கிக் கிடக்கிறது.

இந்நிலையில் அவரது இயக்கத்தில் ‘என்ஜிகே’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

இந்தப் படத்தையடுத்து கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஏற்கெனவே ‘அயன்’, ‘மாற்றான்’ படங்களில் நடித்துள்ள சூர்யா, மூன்றாவது முறையாக அவரது இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்தை முதலில் ஏஜிஎஸ் தயாரிப்பதாக இருந்தது.

சூர்யா கேட்ட சம்பளம் மிக அதிகம் என்று நினைத்த ஏஜிஎஸ் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டுகோள் வைத்தது.

அதற்கு சூர்யா ஒப்புக்கொள்ளாததினால் ஏஜிஎஸ் விலகிக்கொள்ள லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தயாரிக்க முன் வந்திருக்கிறது.

பிரம்மாண்டமானமுறையில் தயாரக இருப்பதாக சொல்லப்படும் இந்தப் படத்தில் மலையாள நடிகரான மோகன்லாலும் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்.

மோகன்லாலும், சூர்யாவும் முதன் முறையாக இணைந்து நடிக்கும் படம் இது. என்றாலும், இந்த படத்தை இயக்கும் கே.வி.ஆனந்த், ஏற்கெனவே மோகன்லாலுடன் ‘தேன்மாவின் கொம்பத்து’ உட்பட பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார்.

பாப்கார்ன், ஜில்லா, உட்பட மோகன்லால் நடிப்பில் பல தமிழ்ப்படங்கள் வெளியானாலும் எந்தப்படமும் பெரிய வெற்றியைப் பெறவில்லை.

கே.வி.ஆனந்த் – சூர்யா நடிக்கும் படமாவது இந்த செண்ட்டிமென்ட்டை உடைக்குமா?




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better