ஊடகங்கள் என்பது திரைப்பட நட்சத்திரங்கள் வெளிஉலகத்தைப் பார்க்க உதவும் ஜன்னல்.
அதிலிருந்து தென்றலும் வீசும், அனல்காற்றும் அடிக்கும்.
இரண்டையும் சமமாகப் பார்க்கத் தெரிந்த, பாவிக்கத் தெரிந்தவர்களுக்கு ஊடகங்கள் என்றைக்குமே உற்ற தோழன்தான்.
இதற்கு மாறாக, ஊடகங்களைப் பார்த்தாலே ஓட்டம் எடுப்பவர்களும், ஊடகங்களின் கண்ணில்படாமல் ஒளிந்து வாழ்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
இந்தப்பட்டியலில் முதலிடம் அஜித்துக்குத்தான்.
நடிகைகளில்…. நயன்தாரா.
இந்தப்பட்டியலில் சிவகார்த்திகேயன், ஜெய் போன்றவர்களும் இருக்கிறார்கள்.
ஏன் இவர்கள் மீடியாவைக்கண்டு மிரள்கிறார்கள்?
முதலில்… அஜித்.
அமராவதி தொடங்கி அமர்க்களம் வரை மீடியா ப்ரண்ட்லியாகவே இருந்தார் அஜித்.
எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அஜித்தை தொடர்பு கொள்ளலாம். எதையும் மறைக்காமல் எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசுவார்.
அப்படி இருந்த அஜித் இன்றைக்கு, மீடியா வெளிச்சத்திலிருந்து விலகி இருக்கிறார்.
காரணம்… மீடியாவில் இருந்த சிலரது தவறான நடத்தையும்… நடவடிக்கையும்தான் காரணம்.
அவர்களிடம் நட்புமுறையில் அஜித் பகிர்ந்து கொண்ட பல விஷயங்களை பத்திரிகை பசிக்காக கவர் ஸ்டோரியாக்கி, அஜித்துக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தினர்.
அதன் காரணமாகவே தனக்கு வாய்ப்பூட்டு போட்டுக் கொண்டார் அஜித்.
அவருடைய வருத்தத்தையும் வலியையும் புரிந்து கொள்ள முடிகிறது.
அதேநேரம், யுடியூபில் சினிமா விமர்சனம் செய்யும் ஆளிடம் கான்ஃபரன்ஸ் கால் போட்டு அரை மணி நேரம் பேசுவதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை.
நயன்தாராவின் பிரச்சனை வேறு.
நடிக்க வந்ததே காதலிக்கத்தான் என்பதுபோல், அடிக்கடி காதலர்களை மாற்றிக் கொண்டே இருக்கிறார்.
பிரபல மலையாள இயக்குநர் தொடங்கி சிம்பு, பிரபுதேவா, உதயநிதி, விக்னேஷ்சிவன் என்று நயன்தாராவின் காதலர்களின் எண்ணிக்கை எக்கச்சக்கம்.
மீடியாவை சந்திக்க நயன்தாரா அஞ்சவது இதனால்தான்.
பல பேர் கூடியிருக்கும் சபையில், தன்னுடைய பர்சனல் கதையை எந்த மீடியாவது கேள்வியாக கேட்டுவிட்டால்?
அதனாலேயே மீடியா இருக்கும் திசை பக்கம் கூட இவர் திரும்புவது இல்லை.
விஜய் டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்த சிவாகார்த்திகேயனுக்கு ஆரம்பம் முதலே மீடியா மீது பெரிய மரியாதை இல்லை.
நேற்றுவரை மீடியாவில் இருந்துவிட்டு, இன்றைக்கு அதே மீடியா ஆட்களிடம் நான் ஹீரோவாக்கும் என்று பந்தா காட்டினால் அது தனக்கு எதிர்வினையாற்றும் என்ற எண்ணத்தின் காரணமாகவே விலகியிருக்கிறார்.
ஜெய்யுக்கு மீடியாவைக் கண்டால் வேர்த்துவிறுவிறுத்துபோவதற்கு வேறு காரணம்.
ஒவ்வொரு வருடமும் ஃபெயிலாகி, பின்னர் அந்தப்பள்ளிக்கூடத்துக்கு ஃபேன்கள் வாங்கிக் கொடுத்து பாஸ் ஆனவர் ஜெய்.
இதை அவரது பெரியப்பாவான தேவாவே வேடிக்கையாக அடிக்கடி சொல்வார்.
படிப்பில் படு ஆவரேஜான ஜெய்க்கு ஆங்கிலம் சுட்டுப்போட்டாலும் வரவே வராது.
பிரஸ்மீட்டில் யாராவது ஆங்கிலத்தில் கேள்வி கேட்டுவிட்டால் என்ன செய்வது?
அதனாலேயே இவரும் மீடியாவின் பார்வையிலிருந்து எஸ்கேப்பாகி வருகிறார். போதாக்குறைக்கு அஜித்தின் அட்வைஸ் வேறு.
அஜித், நயன்தாரா, சிவகார்த்திகேயன், ஜெய் போன்றவர்கள் மீடியாவின் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதால்…
நஷ்டம் மீடியாவுக்கு இல்லை என்பதை மட்டும் இவர்கள் ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் நல்லது.