Search
Thursday 18 October 2018
  • :
  • :

சிறிய படங்களுக்கு உதவ முன்வரும் ‘மனுசனா நீ’ பட நிறுவனம்

சிறிய படங்களுக்கு உதவ முன்வரும் ‘மனுசனா நீ’ பட நிறுவனம்

ஒரு படத்தை ஓட வைக்க வேண்டும் என்றால், அதற்கு முன்னதாக அந்தப் படத்தை பேச வைக்க வேண்டும்.

இந்த வித்தையை மிகச்சரியாக கற்றுக் கொண்டு இயக்குநராகி இருக்கிறார் கஸாலி. மனுஷனா நீ படத்தின் இயக்குநர்.

மட்டுமல்ல அந்தப் படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான்.

அதனால்தானோ என்னவோ, மனுஷனா நீ படத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்காக மண்டையைப் பிய்த்து பல அதிரடிகளை அரங்கேற்றி வருகிறார்.

மனுஷனா நீ படம் மருத்துவ ஆய்வு குறித்தும் அதில் நடக்கும் அதி பயங்கர சம்பவங்கள் குறித்து பேசுகிற படம். இதை குறிக்கும்வகையில், ரஜினியின் வயது 162…ஏ.ஆர். ரஹ்மானின் வயது 148… என்று போஸ்டர்கள் ஒட்டி தமிழகத்தையே திரும்பிப்பார்க்க வைத்தார்.

ரஜினி, ஏ.ஆர். ரஹ்மான் மட்டுமல்ல, கமல், அமிதாப், அப்துல் கலாம், ஷாருக்கான், சச்சின் டெண்டுல்கர், ஜாக்கிசான், ஒபாமா என உலகின் முன்னணி பிரபலங்கள் பலரது புகைப்படத்துடன் அவர்களின் வயதை 100 வருடங்கள் அதிகப்படுத்தி குறிப்பிடப்பட்டிருந்த அந்த போஸ்டரைத் தொடர்ந்து, சமீபத்தில் இன்னொரு போஸ்டரை ஒட்டி ஆச்சய்ரப்பட வைத்தார் கஸாலி.

பாக்காதீங்க…. மனுஷனா நீ படத்தை பாக்காதீங்க… என்று தமிழகம் முழுக்க போஸ்டர். அருகில் சென்று பார்த்தால் பாக்காதீங்க என்ற வார்த்தைக்குக் கீழே சின்ன சைஸில் திருட்டுத்தனமாக என்ற வாசகம்.

இப்படி எல்லாம் மக்களை பேச மனுஷனா நீ படம் பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது.

துபாயில் பிஸினெஸ் செய்து அனுபவமுள்ள கஸாலி, சினிமா மீதிருந்த காதலால் தனது முதல் திரைப்படத்தை இயக்கும்போது பலவிதமான பிரச்சனைகளையும் சிக்கல்களையும் சந்தித்தார்.

தயாரிப்பு, படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்சன், வெளியீடு என எல்லாத்துறைகளில் உள்ள பிரச்சனைகளையும் நேரடியாக சந்தித்த அனுபவம் கஸாலியை யோசிக்க வைத்தது.

தமிழ் சினிமாவில் தயாரிக்கப்பட்டு வெளியாகும் படங்களை விட வெளியாகாமல் உள்ள படங்கள் பல மடங்கு இருக்கின்றன.

அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன காரணங்கள் என்பதை நேரடியாக தன் அனுபவத்தில் கண்கூடாகக் கண்ட கஸாலி, அவர்களுக்கு உதவும் நோக்கில், ‘H3 சினிமாஸ்’ நிறுவனத்துடன் இணைந்து சிறிய படங்களுக்கும், அதன் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் ஆதரவுக்கரம் நீட்டும் முயற்சியாக பிரச்சனையில் சிக்கியுள்ள படங்களை முடித்துக் கொடுப்பது, வாங்கி வெளியிடுவது, வெளியிட உதவுவது போன்ற உதவிகளை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதற்குத் தேவையான ஸ்டூடியோ நிர்மாணிக்கும் பணி முழு வீச்சில் நடக்கிறது.

அதுபற்றிய விவரமான அறிவிப்பு, ‘மனுசனா நீ’ பட வெளியீட்டிற்குப் பின் வெளியாகும். நம்பிக்கையோடு வந்தவர்களை சென்னையும் சரி, தமிழ் சினிமாவும் சரி என்றுமே திருப்பி அனுப்பியதில்லை என்று சொல்வார்கள். அந்த நம்பிக்கையோடு அடியெடுத்து வைத்திருக்கிறார் கஸாலி.

“மனுசனா நீ” எனது முதல் படம் என்றாலும், எதிர்பார்த்ததை விட ரொம்ப திருப்தியாக வந்திருக்கிறது. அந்த வகையில் ஒரு இயக்குநராக நான் சந்தோசப்படுகிறேன். விரைவில் அந்த சந்தோசத்தை மக்கள் இன்னும் இரட்டிப்பாக்குவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்’ என்றார்.

இந்தப் படம் வெளியான உடனேயே எனது அடுத்த படத்திற்கான வேலைகளும், மேலே குறிப்பிட்ட சிறு படங்களை வெளியிடும் முயற்சிகளும் தொடங்குவேன் என்கிறார் நம்பிக்கையோடு!

 




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better