Search
Friday 21 September 2018
  • :
  • :

‘மன்னர் வகையறா’வுக்காக புதுக்கூட்டணி அமைக்கிறார் விமல்

மிர்ச்சி சிவா, பவர்ஸ்டார் சீனிவாசன் நடித்த ‘அட்ரா மச்சான் விசிலு’ என்கிற காமெடி படத்தை தயாரிப்பதன் மூலம் தமிழ்சினிமாவில் களம் இறங்கியுள்ளது அரசு பிலிம்ஸ் என்ற புதிய பட தயாரிப்பு நிறுவனம்.

‘அட்ரா மச்சான் விசிலு’ படத்தின் ரிலீசுக்கான இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தங்களது அடுத்த படத்தை தயாரிப்பதற்கான வேலைகளில் இறங்கியுள்ள அரசு பிலிம்ஸ் ‘மன்னர் வகையறா’ என்ற  படத்தை தயாரிக்கிறது.

காமெடியுடன் கூடிய கமர்ஷியல் படங்களை தருவதில் கைதேர்ந்தவரான இயக்குனர் பூபதி பாண்டியன் இந்தப்படத்தை இயக்குகிறார்.

விமல் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், கயல் ஆனந்தி கதாநாயகியாக நடிக்கிறார்.

மற்றும் பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், நாசர், யோகிபாபு, ஜெயபிரகாஷ், கார்த்திக் (யாரடி நீ மோகினி) என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடிக்கிறது.

இதுநாள் வரை தான் நடித்த படங்களைவிட, இந்த ‘மன்னர் வகையறா’ தன்னை வித்தியாசப்படுத்திக்காட்டும் என்றும், காமெடியில் தன்னை இன்னும் ஒரு படி மேலே கொண்டுசெல்லும் படமாக இது இருக்கும் என்றும் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறார் விமல்.

தவிர இதுநாள் வரை சூரியுடன் காமெடிக்கூட்டணி அமைத்துவந்த விமல், இந்தப் படத்தில்  ரோபோ சங்கருடன் புதிதாக கூட்டணி அமைக்கிறார்.

படத்திற்கு படம், காட்சிக்கு காட்சி காமெடி சரவெடிகளை அள்ளி வீசிவரும் காட்சிகளில் எல்லாம் ரசிகர்களை தன்பக்கம் திருப்பி முன்னணி காமெடியனாக வளர்ந்துவரும் யோகிபாபுவும் இப்படத்தில் நடிக்கிறார்.

பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய ஜாக்ஸ் இசையமைக்கிறார்.

இந்த படத்தை முதல் பிரதி அடிப்படையில் நடிகர் விமல் தயாரிக்கிறார்.

‘மன்னர் வகையறா’ படத்தின் படப்பிடிப்பு ஜூன் 20 முதல் சென்னையில் துவங்க இருக்கிறது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better