Search
Friday 21 September 2018
  • :
  • :

மலேஷியாவில் இந்தியன் தாத்தா

மலேஷியாவில் இந்தியன் தாத்தா

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கிய ‘இந்தியன்’ படம் 1996-ம் ஆண்டு மே மாதம் 9-ம் தேதி ரிலீஸானது.

இரண்டு வேடங்களில் கமல் நடித்த இந்தியன் படத்தில் ஊர்மிளா மடோன்கர், கவுண்டமணி, செந்தில், மனோரமா, நெடுமுடி வேணு, அஜய் ரத்னம், கிரேஸி மோகன், நிழல்கள் ரவி, பொன்னம்பலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

அப்பா கமலுக்கு ஜோடியாக சுகன்யாவும், மகன் கமலுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலாவும், கமலுக்கு மகளாக கஸ்தூரியும் நடித்திருந்தார்கள்.

‘இந்தியன் 2’ படத்துக்காக 22 வருடங்கள் கழித்து கமல் – ஷங்கர் கூட்டணி மீண்டும் இணைய உள்ளனர்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு, விரைவில் தொடங்க இருக்கிறது.

இந்தநிலையில், மலேஷியாவில் நடைபெற்ற தேர்தலில் முன்னாள் அதிபர் மகாதீர் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளார்.

தானாகவே அடுத்த தலைமுறைக்கு விட்டு கொடுத்து பதவியல் இருந்து இறங்கிய அவர், அடுத்து வந்தவர்கள் தவறு செய்தபோது தட்டி கேட்டார். அதனால் தன்னுடைய கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். இன்றுதான் வளர்த்த கட்சியை எதிர்த்து நின்று வெற்றி பெற்று அடுத்த பிரதமர் ஆகிவிட்டார்.

எனவே, தப்பு செய்தா தட்டி கேட்டும் மலேஷியன் தாத்தா… இந்தியன் தாத்தா மாதிரி என்று மலேஷியாவில் அவரை கொண்டாடுகிறார்கள்.

இந்தியன் வெளியாகி 22 வருடங்கள் கழித்து மலேஷியாவில் இந்தியன் தாத்தா பெயர் அடிபடுகிறது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better