Search
Monday 18 December 2017
  • :
  • :

உதயநிதிக்கு வசனம் எழுதும் சமுத்திரக்கனி

உதயநிதிக்கு வசனம் எழுதும் சமுத்திரக்கனி

மகேஷிண்டே பிரதிகரம், உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க, மூன் ஷாட் என்டேர்டைன்மெண்ட் என்கிற புதிய பட நிறுவனத்தின் சார்பில் தயாராகிறது.

இரண்டு தேசிய விருதுகள், ஐந்து மாநில விருதுகள், இரண்டு பிலிம் ஃபேர் விருதுகள் மற்றும் பல்வேறு தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களின் விருதுகள் வென்ற ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்துக்கு தமிழில் இன்னும் பெயர் சூட்டவில்லை.

உதயநிதியுடன் பார்வதி நாயர் மற்றும் பிரபல மலையாள நடிகை நமீதா பிரமோத் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க இவர்களுடன் சமுத்திரகனி, எம் எஸ் பாஸ்கர், மற்றும் கருணாகரன் நடிக்க உள்ளனர்.

சமுத்திர கனி வசனம் இயற்ற, டர்புக சிவா இசை அமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய உருவாகும் இந்தப் படத்தின் துவக்க விழா, சென்னையில் four frames ஒலிப்பதிவு கூடத்தில் நடந்தது.

வருகின்ற 19 ஆம் தேதி குற்றாலம், தென்காசி ஆகிய இடங்களில் தொடர்ந்து நடை பெற உள்ளது.

இயக்குனர் பிரியதர்ஷனும், உதயநிதியும் இணைந்து பணியாற்றும் முதல் படம்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better