Search
Sunday 20 January 2019
  • :
  • :

கன்னட ரீமேக் படத்தை இயக்கும் முத்தையா

கன்னட ரீமேக் படத்தை இயக்கும் முத்தையா

சசிகுமார் நடித்த ‘குட்டிப்புலி’, கார்த்த் நடித்த ‘கொம்பன்’, விஷால் நடித்த ‘மருது’ ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா.

இவரது படங்களில் சாதிவெறி அதிகமாக இருக்கும் என்பதால் அவருக்கு படம் கொடுக்கவே தயாரிப்பாளர்கள் தயங்கினார்கள்.

இந்நிலையில் சூர்யாவுக்கு ஒரு கதை சொன்னார் முத்தையா. அந்தக் கதையிலும் சாதி சார்ந்த விஷயங்கள் அதிகம் இருந்ததால் அதில் நடிக்க மறுத்துவிட்டார் சூர்யா.

அந்தக் கதையையே கௌதம் கார்த்திக்கிடம் சொல்லி ஓகே வாங்கிய முத்தையா தற்போது ‘தேவராட்டம்’ என்ற பெயரில் இயக்கி வருகிறார்.

கௌதம் கார்த்திக் ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்கும் இந்த படத்தை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்தபடத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் கன்னடத்தில் ஷிவ்ராஜ் குமார் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘டகரு’ என்ற படத்தின் தமிழ் ரீ-மேக் உரிமையை வாங்கியுள்ளார் இயக்குனர் முத்தையா!

‘தேவராட்டம்’ படம் முடிந்ததும் ‘டகரு’ கதையை இயக்க திட்டமிட்டிருக்கிறார் முத்தையா.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better