Search
Wednesday 17 January 2018
  • :
  • :

கேரளாவில் வேலைக்காரன் …. உண்மை நிலவரம் என்ன?

கேரளாவில் வேலைக்காரன் …. உண்மை நிலவரம் என்ன?

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில், பிரகாஷ் ராஜ் நடித்து கடந்த 22-ஆம் வெளியான படம் ‘வேலைக்காரன்’.

இந்த படத்திற்கு முதல் 3 நாட்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

படத்தைப் பற்றிய நெகட்டிவ் மவுத்டாக் பரவியதை அடுத்து 4ஆவது நாள் முதல் வசூல் குறைந்து விட்டது.

இந்நிலையில் கேரளா மற்றும் கர்நாடகாவிலும் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்ற தகவலை சமீபத்தில் இயக்குனர் மோகன் ராஜா சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதுமட்டுமல்ல, கேரளாவில் இப்படத்திற்கு மேலும் 30 தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்ற தகவலையும் ‘வேலைக்காரன்’ படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

உண்மையில் கேரளாவில் திரையிடப்பட்ட 60 தியேட்டர்களிலும் படத்தை தூக்கிவிட்டனர் என்பதே உண்மையான நிலவரம்.

உண்மை இப்படி இருக்க, படத்தை எப்படியாவது ஓட வைக்க வேண்டும் என்பதற்காக சீப்பான பப்ளிசிட்டி உத்தியை கையாண்டு வருகின்றனர்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better