Search
Tuesday 25 September 2018
  • :
  • :

ஆறு இயக்குநர்கள் நடிக்கும் படம்

ஆறு இயக்குநர்கள் நடிக்கும் படம்

 

ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா… கிளம்பிட்டாங்கய்யா…’.

இந்தப்படத்தை ரஜாக் இயக்கியுள்ளார். இவர் கரண் நடித்த மலையன் படத்தை இயக்கிய கோபியிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இவர் இயக்கும் முதல் படம் இது.

‘கிளம்பிட்டாங்கய்யா… கிளம்பிட்டாங்கய்யா…’ படத்தில் கே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் ஆகிய ஆறு இயக்குநர்கள் நடித்துள்ளார்கள்.

மேலும், ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன், ஸ்வாதி, அஸ்மிதா, ரத்திஷ், விஷ்வா, கண்ணன், ராஜ், திவ்யா உள்ளிட்ட 4500 துணை நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

இப்படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

ஸ்ரீகாந்த் என்ற புதுமுக இசையமைப்பாளர் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

வாழ்க்கையில் விரக்தியடைந்து, யாருடைய ஆதரவும் இல்லாமல் இருக்கும் நான்கு முதியவர்களை தேடி, ஒரு வேலை வருகிறது. அந்த வேலையை செய்து முடித்தால் பெரிய தொகை கிடைக்கும். அந்த வேலையை தங்களால் செய்ய முடியாது என்பதால் நான்கு முட்டாள் இளைஞர்களின் உதவியை நாடுகிறார்கள்.
அந்த இளைஞர்களின் செயல்களால், நான்கு முதியவர்களும் பிரச்சனைகளில் மாட்டிக் கொள்கிறார்கள். அது மட்டுமல்ல அவர்கள் தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள்.

இறுதியில் இதிலிருந்து நான்கு முதியவர்கள் மீண்டார்களா? இல்லையா? என்பதே ‘கிளம்பிட்டாங்கய்யா… கிளம்பிட்டாங்கய்யா…’ படத்தின் கதை.

இந்தப் படத்தில் கே.பாக்யராஜ் போலீஸ் அதிகாரியாகவும், மன்சூர் அலிகான் காட்டுவாசித் தலைவராகவும், ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் அரசியல்வாதியாகவும் நடித்திருக்கிறார்கள்.

முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்திய இப்படத்தில் திரில்லர், ஆக்‌ஷன், திகில் கலந்து உருவாக்கி இருக்கிறார்கள்.

பெரும்பாலான படப்பிடிப்பு கொல்லி மலையில் நடைபெற்றுள்ளது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better