Search
Saturday 20 January 2018
  • :
  • :

ரகுல் ப்ரீத் சிங்குக்கு பதில் கீர்த்தி சுரேஷ்

ரகுல் ப்ரீத் சிங்குக்கு பதில் கீர்த்தி சுரேஷ்

மெர்சல் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய்.

விஜய்யின் 62 ஆவது படமாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார்.

விஜய் 62 படத்திற்கான கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

‘பைரவா’வில் விஜயுயுடன் கதாநாயகியாக நடித்த கீர்த்தி சுரேஷ் ‘விஜய்-62’ படத்தின் மூலம் விஜய்யுடன் இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கிறார்.

இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் பரிசீலிக்கப்பட்டவர் ரகுல் ப்ரீத் சிங்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர் படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடித்தார். அப்போதே ரகுல் ப்ரீத் சிங்கிடம் பேசி சம்மதம் வாங்கியிருந்தார் முருகதாஸ்.

ஸ்பைடர் படம் படு தோல்வியடைந்து, ஏ.ஆர்.முருகதாஸின் மார்க்கெட்டையே அசைத்துப்பார்த்துவிட்டது.

எனவே சென்ட்டிமெண்ட்டாக ரகுல் ப்ரீத் சிங் வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறார் முருகதாஸ்.

இந்த விஷயத்தை விஜய்யிடம் சொன்னபோது, கீர்த்தி சுரேஷை சிபாரிசு செய்திருக்கிறார் விஜய்.

அதன் பிறகே அவருக்கு அட்வான்ஸ் கொடுத்து கமிட் பண்ணியுள்ளனர்.

கீர்த்தி சுரேஷ் மட்டுமல்ல, இசை அமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளராக கிரீஷ் கங்காதரன், படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதையும் உறுதி செய்துள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better