Search
Saturday 15 December 2018
  • :
  • :

மானேஜரை கடுப்பாக்கிய கீர்த்தி சுரேஷ்…

மானேஜரை கடுப்பாக்கிய கீர்த்தி சுரேஷ்…

மலையாளத்திலிருந்து கீர்த்திசுரேஷ் தமிழுக்கு வந்தபோது ராசியில்லாத நடிகை என்ற முத்திரை அவர் மீது குத்தப்பட்டது.

அவர் கதாநாயகியாக நடித்த முதல் தமிழ்ப்படமான இது என்ன மாயம், அடுத்து அவர் கமிட்டான பாம்புசட்டை, ரஜினி முருகன் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடந்தன.

இவற்றில் ரஜினி முருகன் படமோ வெளிவரவே முடியாத அளவுக்கு கடும் சிக்கலை சந்தித்தது.

அதனால் கீர்த்தி சுரேஷை அதிர்ஷ்டக்கட்டை (அந்த கட்டை இல்லீங்க..) என்று எண்ணியநிலையில், திடீர் திருப்பமாக இது என்ன மாயம், ரஜினி முருகன் படங்கள் அடுத்தடுத்து வெளிவந்தன.

பாம்புசட்டை இன்னும் வெளிவரவில்லை என்றாலும், ரஜினி முருகன், ரெமோ படங்களின் வெற்றியால் தற்போது ராசியான நடிகையாகிவிட்டார் கீர்த்திசுரேஷ்.

அதுமட்டுமல்ல, விக்ரம் பிரபு, சிவகார்த்திகேயன், தனுஷ் ஆகியோருக்கு ஜோடியாக நடித்ததால் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகி விட்டார் .

தற்போது விஜய்யுடன் ‘பைரவா’ படத்தில் நடித்து முடித்துள்ள அவர், அடுத்து சூர்யாவுடன் ’தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கவிருக்கும் 25 ஆவது படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

முன்னணி தெலுங்குப்பட இயக்குநரான த்ரிவிக்ரம் இயக்கத்தில் உருவாகும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

அவரது சிபாரிசிலேயே பவன் கல்யாண் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கீர்த்தி சுரேஷுக்குக் கிடைத்ததாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

அதாவது, அனிருத்தும் சிவகார்த்திகேயனும் நண்பர்கள்.

சிவகார்த்திகேயனுக்கு கீர்த்தி சுரேஷ் ரொம்ம்ம்ம்ப க்ளோஸ்.

தன் நண்பருடைய தோழியான கீர்த்தி சுரேஷுக்காக பவன்கல்யாணிடமும் இயக்குநர் த்ரிவிக்ரமிடமும் பேசினாராம் அனிருத்.

அவரது சிபாரிசு காரணமாகவே கீர்த்தி சுரேஷை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.

அனிருத் மூலம் தெலுங்குப்பட வாய்ப்பு கிடைத்ததால், இந்தப் படத்தின் சம்பளத்தில் கமிஷன் தர மாட்டேன் என்று தன்னுடைய மானேஜரிடம் சொல்லிவிட்டாராம் கீர்த்தி சுரேஷ்.

எனவே அவர் மீது செம கடுப்பில் இருக்கும் மானேஜர் கீர்த்தியைப் பற்றி வெளியே புலம்ப ஆரம்பித்திருக்கிறார்.

சீக்கிரமே கீர்த்தி சுரேஷ் பற்றிய பெரிய பெரிய விஷயங்கள் வெளியே வரலாம்.

வெயிட்டிங்…




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better