Search
Saturday 16 February 2019
  • :
  • :

சர்ச்சையை விரும்பும் தயாரிப்பாளர்

சர்ச்சையை விரும்பும் தயாரிப்பாளர்

சூர்யா, கார்த்தியை வைத்து படங்களை எடுத்த ‘ஸ்டுடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல்ராஜா சமீபகாலமாக அடல்ட் கண்டன்ட் என்கிற ஆபாசப்படங்களை எடுக்க ஆரம்பித்துவிட்டார்.

அது குறித்து கடுமையான விமர்சனங்கள் வந்தாலும், இன்னொரு பக்கம் செமத்தியாக கல்லாகட்டி வருகிறார்.

கஜினிகாந்த் படத்தை அடுத்து இப்போது ‘தேவராட்டம்’ என்ற படத்தை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துவருகிறார்.

‘குட்டிப்புலி’, ‘கொம்பன்’, ‘மருது’, ‘கொடிவீரன்’ ஆகிய படங்களை தொடர்ந்து முத்தையா இயக்கி வரும் இந்த படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார்.

மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தின் பூஜை கடந்த மே மாதம் சென்னையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக மதுரையில் நடைபெற்று வருகிறது.

முத்தையா இதற்கு முன் இயக்கிய படங்கள் எல்லாமே குறிப்பிட்ட ஒரு சாதியை உயர்த்திப்பிடித்த படங்கள்தான். அந்தப்படங்களைப்போலவே இந்தப்படமும் குறிப்பிட்ட அந்த சாதியைப் பற்றிய படம்தானாம்.

கதையைக் கேட்ட தயாரிப்பாளர், இந்தப்படம் நிச்சயம் சர்ச்சையில் சிக்கும், அதனால் கிடைக்கும் பப்ளிசிட்டியே தேவராட்டம் படத்தை ஓட வைத்துவிடும் என்று சொல்லித்தான் முத்தையாவுக்கு வாய்ப்பே கொடுத்தாராம்.

படத்தில் ஸ்டார் வேல்யூ இல்லை என்றதும் சர்ச்சையை நம்பி படம் எடுக்க ஆரம்பித்துவிட்டார் கே.ஈ.ஞானவேல்ராஜா.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better