Search
Wednesday 17 October 2018
  • :
  • :

அஜித் படத்தில் கருணாகரன்

அஜித் படத்தில் கருணாகரன்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம்,கிராமத்துப் பின்னணியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.

வேதாளம் படமோ சிட்டி பேக்டிராப்பில் எடுக்கப்பபட்டிருந்த படம்.

ஆனாலும் இரண்டு படங்களும் கமர்ஷியல் மசாலாவாக இருந்ததால் எளிதில் வெற்றிபெற்றன.

இந்நிலையில், இயக்குநர் சிவா அஜித் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை முழுக்க முழுக்க வெளிநாடுகளிலேயே படமாக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

சில தினங்களுக்கு முன்  நடைபெற்ற இப்படத்தின் பூஜையைத் தொடர்ந்து, இந்த மாதமே படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்பட்டது.

தற்போது ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதுவும் இங்கே இல்லை, பல்கேரியா நாட்டில்தான் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு தொடங்குகிறது.

அதனைத் தொடர்ந்து ஐரோப்பாவிலுள்ள சில நாடுகளிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

அதன் பிறகு இந்தியாவிலும் படப்ப்பிடிப்பு தொடரும் என்கிறார்கள்.

இந்தப் படத்தின் நட்சத்திரப்பட்டியலில் காஜல் அகர்வால், சாய் பல்லவி தவிர, தற்போது கருணாகரனும் இடம்பிடித்திருக்கிறார்.

அஜித்தின் மானேஜர்தான் கருணாகரனுக்கும் கால்ஷீட் பார்க்கிறார். அந்த அடிப்படையில் அஜித் உடன் நடிக்கும் வாய்ப்கை கருயணாகரனுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.

இந்தப் படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2017ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவருமாம்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better