Search
Sunday 19 August 2018
  • :
  • :

அதற்குள்ளேயே இப்படி பில்ட்அப்பா?

அதற்குள்ளேயே இப்படி பில்ட்அப்பா?

ரகுமான் நடித்த‘துருவங்கள் பதினாறு’ படத்தை ஆரம்பத்தில் யாரும் சீண்டக்கூட இல்லை.. அப்படத்தின் ஹீரோவான நடிகர் ரகுமான் தன்னுடைய சகலையான இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மூலம் துருவங்கள் பதினாறு படத்தை புரமோட் பண்ண வைத்தார்.

அதன் பிறகே அந்தப் படத்துக்கு கவனஈர்ப்பு கிடைத்தது.

படமும் வெற்றியடைந்து, அப்படத்தின் இயக்குநரான கார்த்திக் நரேன் பேசப்பட்டார்.

தற்போது கார்த்திக் நரேன் தனது இரண்டாவது படமாக ‘நரகாசூரன்’ படத்தை இயக்கி வருகிறார்.

இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகின்றன.

இப்படம் விரைவில் வெளியாகிறது.

இந்நிலையில் கார்த்திக் நரேன் தனது மூன்றாவது பட அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

‘‘எனது மூன்றாவது படம் கையெழுத்தானது! மனதுக்கு ரொம்பவும் பிடித்த ஸ்கிரிப்ட்! படம் குறித்த தகவல்கள் விரைவில்!’ என்று இது குறித்து அவர் ட்விட்டரில் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அவருடைய இந்த ட்வீட்டைப் பார்த்துவிட்டு, ஒரு படம் ஓடியதற்கே இந்த பில்ட்அப்பா என்ற குரல்கள் கோடம்பாக்கத்தில் கேட்கின்றன.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better