Search
Thursday 18 October 2018
  • :
  • :

உதயநிதிக்கு அப்பாவாக கார்த்திக்

உதயநிதிக்கு அப்பாவாக கார்த்திக்

முன்னாள் ஹீரோக்கள் தற்போது அப்பா வேடத்தில் நடிப்பது புதிய செய்தியில்லை.

தற்போது ‘மிஸ்டர் சந்திரமெளலி’ படத்தில் தன் மகன் கெளதம் கார்த்திக்குக்கு அப்பாவாக நடித்துள்ளார் கார்த்திக்.

இந்தப் படத்தை திரு இயக்கியுள்ளார்.

இந்தப்படத்தை அடுத்து உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு அப்பாவாக கார்த்திக் நடிக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின் தற்போது சீனு ராமசாமி இயக்கி வரும் ‘கண்ணே கலைமானே’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில், தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார்.

மதுரை வாடிப்பட்டியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்துக்குப் பிறகு, அட்லீயின் உதவியாளர் ஈநாக் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

பிரியா பவானிசங்கர், இந்துஜா என இரண்டு ஹீரோயின்கள் இந்தப்படத்தில் நடிக்கின்றனர்.

உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பட நிறுவனம் இந்தப்படத்தைத் தயாரிக்கிறது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better