Search
Tuesday 19 December 2017
  • :
  • :

கமலால் செய்ய முடியாததை ராஜமௌலி சாதித்தார்!

கமலால் செய்ய முடியாததை ராஜமௌலி சாதித்தார்!

லட்சங்களில் படம் எடுத்த காலத்திலேயே முதன்முறையாக ஒரு கோடி பட்ஜெட்டில் படம் தயாரித்தவர் கமல்ஹாசன்தான்.
1986ல் வெளியான ‘விக்ரம்’ படம்தான் அது.
கமல்ஹாசன் தயாரித்து ஹீரோவாக நடித்த அப்படத்தில் அம்பிகா, லிசி மற்றும் ஹிந்தி நடிகை டிம்பிள் கபாடியா என மூன்று கதாநாயகிகள் நடித்தனர்.
முக்கிய வேடத்தில் பாலிவுட் வில்லன் நடிகர் அம்ஜத்கான் நடித்தார்.
இப்படியாக பெரிய பட்ஜெட் படங்களுக்குப் பிள்ளையார் சுழி போட்ட கமல், சில வருடங்களுக்கு முன் அதாவது 1997 ஆம் ஆண்டில் ‘மருதநாயகம்’ என்ற படத்தைத் தொடங்கினார்.
இங்கிலாந்து ராணி எலிசபத் தொடங்கி வைத்த இந்தப் படத்தை பல கேடி செலவில் தயாரிக்க திட்டமிட்டிருந்தார்.
சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றநிலையில் ‘மருதநாயகம்’ படத்தை டிராப் பண்ணினார் கமல்.
அப்படத்தை கமல் உடன் இணைந்து தயாரிக்க முன் வந்த வெளிநாட்டு பட நிறுவனம் பின்வாங்கியதே காரணம் என்று சொல்லப்பட்டது.
பின்னர் அமெரிக்க செல்லும்போதெல்லாம் ஹாலிவுட் படநிறவனங்களின் கதவைத்தட்டினார் கமல்.
அப்படியும் அவரது ‘மருதநாயகம்’ கனவு நிறைவேறவில்லை.
இது குறித்து கமலிடம் கேட்டபோதெல்லாம் படத்தின் பட்ஜெட்டை காரணம் சொன்னார்.
இதோ இன்றைக்கு 250 கோடியில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் ‘பாகுபலி’ 300 கோடியைத்தாண்டி வசூல் செய்து வருகிறது.
‘பாகுபலி’ படத்தின் வெற்றி ‘மருதநாயகம்’ படத்தை மீண்டும் எடுக்கும் எண்ணத்தையும் தைரியத்தையும் கமலுக்குக் கொடுத்திருப்பதாகவும் விரைவில் ‘மருதநாயகம்’ படத்தை அவர் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்கிறார்.
‘மருதநாயகம்’, ‘பாகுபலி’ இரண்டு படத்துக்குமே மெல்கிப்சன் இயக்கி நடித்த பிரேவ்ஹார்ட் என்ற ஆங்கிலப்படம்தான் இன்ஸ்பிரேஷன் என்பது குறிப்பிடத்தக்கது.



Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better