Search
Saturday 20 October 2018
  • :
  • :

‘கலகலப்பு 2’ படத்தை பொங்கலுக்கு ரிலீஸ்

‘கலகலப்பு 2’ படத்தின் படப்பிடிப்பை டிசம்பருக்குள் முடித்து, பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார் சுந்தர்.சி.

டிசம்பரில் தொடங்குவதாக இருந்த ‘சங்கமித்ரா’ படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டதை அடுத்து, அதற்கு முன்னதாக ‘கலகலப்பு 2’ படம் இயக்க திட்டமிட்ட சுந்தர்.சி, அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்கினார்.

காரைக்குடியில் தொடங்கப்பட்ட முதற்கட்ட படப்பிடிப்பைத் தொடர்ந்து, தற்போது காசியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அங்கு படப்பிடிப்பு முடிவடைந்ததும் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடர உள்ளது.

ஜீவா, ஜெய், கத்ரீன் தெரசா மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்து வரும் படத்துக்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை பெரிய விலை கொடுத்து சன் டிவி வாங்கியுள்ளது.

கலகலப்பு- 2 படத்தின் மொத்த படப்பிடிப்பையும் டிசம்பருக்குள் முடித்து பொங்கலுக்கு வெளியிட சுந்தர்.சி. முடிவு செய்திருக்கிறார்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better