Search
Tuesday 24 April 2018
  • :
  • :

50 லட்சம் சம்பளம் கேட்கும் கலையரசன்

50 லட்சம் சம்பளம் கேட்கும் கலையரசன்

‘மாயவன்’ படத்தை இயக்கி, தயாரித்த சி.வி.குமார் அடுத்து தயாரிக்கும் படத்துக்கு ‘டைட்டானிக்’- ‘காதலும் கவுந்து போகும்’ என்று பெயர் வைத்திருக்கிறார்.

காதலும் கவுந்துபோகும் என்பது தலைப்புடன் வரும் வார்த்தைகளா அல்லது டேக் லைனா என்ற குழப்பத்துடன் ‘டைட்டானிக்’ படத்துக்கு டைட்டில் சூட்டப்பட்டுள்ளது.

இந்த படத்தில் கதையின் நாயகனாக கலையரன் நடிக்கிறார். ஏற்கனவே சி. வி. குமார் தயாரிப்பில் அதே கண்கள் என்ற படத்தில் நடித்தார் கலையரசன். அந்தப்படம் கமர்ஷியலாக ஓடவில்லை, ஆனாலும் மீண்டும் கலையரசனை வைத்து இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

கதாநாயகிகளாக ‘கயல்’ ஆனந்தியும், அஷ்னா சவேரியும் நடிக்கிறார்கள். எம்.ஜானகி ராமன் எழுதி இயக்கும் இந்த படத்தில் பல்லு ஒளிப்பதிவாளராக பணிபுரிகிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார். கலை இயக்கத்தை எஸ்.ராம் பிரசாத் கவனிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ஜனவரி 1-ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

இந்தப் படத்தின் மீதுள்ள நம்பிக்கையின் காரணமாகவோ என்னவோ தன்னை ஒப்பந்தம் செய்ய வரும் தயாரிப்பாளர்களிடம் 50 லட்சம் சம்பளம் கேட்கிறாராம்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better