Search
Sunday 18 February 2018
  • :
  • :

காஜல் அகர்வால் சம்பளம் 2 கோடி… ராகவா லாரன்ஸின் தாராளம்…!

காஜல் அகர்வால் சம்பளம் 2 கோடி… ராகவா லாரன்ஸின் தாராளம்…!

ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் – ‘முனி’.

இப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளியான ‘காஞ்சனா’ படமும் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

‘காஞ்சனா’வின் தொடர்ச்சியாக சில மாதங்களுக்கு முன் வெளியான ‘காஞ்சனா-2’ படமோ 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

‘காஞ்சனா-2’ படத்தின் அபார வெற்றியைத் தொடர்ந்து அடுத்து ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘நாகா’ என இரண்டு படங்களை இயக்கி, நடிக்க உள்ளார் ராகவா லாரன்ஸ்.

இந்த இரண்டு படங்களையும் வேந்தர் மூவீஸ் நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கிறது.

‘காஞ்சனா’ படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக லட்சுமி ராய் நடித்திருந்தார்.

‘காஞ்சனா-2’வில் டாப்சி, நித்யா மேனன் என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தார்கள்.

ராகவா லாரன்ஸ் அடுத்து இயக்கி நடிக்கும் ‘மொட்டை சிவா கெட்ட சிவா’ படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

வேந்தர் மூவிஸ் தயாரித்துள்ள ‘பாயும்புலி’ படத்துக்கு ஒன்றரை கோடி சம்பளம் வாங்கிய காஜல் அகர்வால் இந்தப் படத்துக்கு 2 கோடி சம்பளம் வாங்கி உள்ளார்.

ராகவா லாரன்ஸ் இயக்கப் போகும் இன்னொரு படமான ‘நாகா’வில் முன்னணி கதாநாயகி நடிக்கிறார்.

அவரது பெயரை விரைவில் அறிவிப்பார்களாம்.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better