Search
Monday 23 April 2018
  • :
  • :

கடவுள் இருக்கான் குமாரு 10 ஆம் தேதி வெளியிட சிக்கலும் இல்லை…

கடவுள் இருக்கான் குமாரு 10 ஆம் தேதி வெளியிட சிக்கலும் இல்லை…

‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா தயாரிப்பில், எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், ஆனந்தி, நிக்கி கல்ராணி ஆகியோர் நடித்துள்ள ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தை முதலில் நவம்பர் 11-ஆம் தேதி அதாவது வெள்ளிக்கிழமை அன்று வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

பின்னர் 10-ஆம் தேதி வியாழக் கிழமை வெளியிட முடிவு செய்தனர்.

இதற்கிடையில்,  ‘கடவுள் இருக்கான் குமாரு’  படத்துக்கு தடை விதிக்கக்கோரி விநியோகஸ்தர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு  10 ஆம் தேதி அன்று நீதிமன்றத்தில் விசாரணை வரும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று  இன்று புதிய மனு ஒன்றை விநியோகஸ்தர்  தரப்பில் தாக்கல் செய்தனர்.

அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளதாகவும், ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் நவம்பர் 10 ஆம் தேதி அன்று விசாரணைக்கு வர உள்ளதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.

எனவே ‘கடவுள் இருக்கான் குமாரு’  படம் வெளியாவதில் எந்தவொரு சிக்கலும் இல்லை.

திட்டமிட்டபடி  நவம்பர் 10 ஆம் தேதி அன்று உலகம் முழுக்க  ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் வெளியாகிறது.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better