Search
Sunday 16 December 2018
  • :
  • :

‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்கு பீட்டா கொடுத்த எதிர்ப்பு

‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்கு பீட்டா கொடுத்த எதிர்ப்பு

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி, நடிக்கும் படம் ‘கடைக்குட்டி சிங்கம்’.

சாயிஷா, பிரியா பவானி சங்கர், சத்யராஜ், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், சூரி, ஸ்ரீமன் vன பெரும்நட்சத்திரக்கூட்டமே நடிக்கும் இப்படத்திற்கு நேற்றுமுன் தினமே சென்சாரில் ‘U’ சர்டிஃபிகேட் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சர்டிஃபிகேட் வழங்கப்படவில்லை.

என்ன காரணம்?

படத்தில் நிறைய காளைமாடுகள் பயன்படுத்தப்பட்டதால் கடைக்குட்டி சிங்கம் படத்துக்கு பீட்டா அமைப்பு குடைச்சல் கொடுத்ததோடு, சென்சார் சர்ட்டிபிகேட் வழங்க எதிர்ப்பும் தெரிவித்துள்ளது.

பீட்டாவின் எதிர்ப்பு காரணமாக விலங்குகள் நலவாரியம் தன்பங்குக்கு நோ அப்ஜெக்ஷன் சர்ட்டிபிகேட் கொடுக்காமல் இழுத்தடித்திருக்கிறது.

அதனால் கடைக்குட்டி சிங்கம் படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவிப்பதில் சிக்கல் நீடித்தது.

ஒருவழியாக பிரச்சனைகள் தீர்ந்த பிறகே ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை வருகிற 13-ஆம் தேதி ரிலீஸ் செய்யவிருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இந்த தாமதம் காரணமாக கடைக்குட்டி சிங்கம் படத்துக்கு கிடைக்க வேண்டிய சுமார் 75 தியேட்டர்கள் தமிழ்ப்படம்-2 படத்துக்குப்போய்விட்டன.




Close
Please support the site
By clicking any of these buttons you help our site to get better